ரங்காவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து வழக்கு ஒன்றின் சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2011ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த பதிவுசெய்யப்படாத வாகனம் விபத்துக்குள்ளானது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி அச்சுறுத்தப்பட்டமை மற்றும் விபத்து தொடர்பான விசாரணைக்காக ஆஜராகாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment