இந்திய முட்டை கப்பல் வந்தடைவதில் தாமதம்
இந்தியாவில் இருந்து முட்டைகளை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் புதுடில்லியிலுள்ள கால்நடைப் பிரிவு ஊடாக கிடைக்க வேண்டிய அறிக்கை மேலும் தாமதமடைவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உரிய அனுமதி கிடைத்தவுடன் 2 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலம் முடிவடையும் வரை பல கட்டங்களாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றை 40 ரூபா அல்லது அதற்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திரும்பத்திரும்ப அரசாங்கத்துக்கு ஞாபகப்படுத்துகின்றோம். இந்தியாவில் முட்டை ஒன்றின்விலை 4 நான்கு ரூபாய் மட்டும். இலங்கை நாணயப்படி எல்லாச் செலவுகளும் போக ஒரு முட்டை இலகுவாக 12 ரூபாய்கள் செலவுடன் இலகுவாக ஆகக்கூடியது சில்லறை விலையில் 15 ரூபாவுக்கு விற்கலாம். அவ்வாறு விற்பனை செய்யாது மகோடிஸ்மார்களுக்கும் அந்த விடயங்களில் தொடர்புடைய அரச ஊழியர்களுக்கும் கோடான கோடி கமிசன் அடித்து பொதுமக்களை இன்னும் இன்னும் நெருக்கடிக்கு ஆளாக்கும் அநியாயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். கமிசனுக்காக ஒரு ரூபாயைக் கூட்டுவது பொதுமக்களுக்கு இருபது இலட்சத்தை அவர்களின் தலையில் கட்டுவாகாகும். பாவம் ஒருவரையல்ல இந்த நாட்டில் வாழும் இரண்டரைக் கோடி மக்களையும் பாதிக்கப் போகின்றது என்பதை அந்த மகோடிஸ்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ReplyDelete