பொலிஸ் திணைக்களத்திற்கு சீனாவிடம் இருந்து, சீருடைத் துணி நன்கொடை
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
15.03.2023

சர்வதேச பிச்சையை வாங்குவதற்கு என்ன மாதிரியான அணிவகுப்பு. இது போன்ற அணிவகுப்பு நடாத்தி பிச்சை எடுப்பது உலகில் முதலாவது நாடு இந்த நாடு தான் என்ற பெருமையும் இலங்கைக்குத் தான்.
ReplyDelete