சீனா - தலிபான்கள் உறவு, வளரப் போகிறதா..?
சீனாவின் சுங்கத் தரவுகளின் படி, 2022 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானில் இருந்து 9.09 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ள சீனா, 59 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஆப்கானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் ஊடாக சீனாவுக்கு சாதகமான வர்த்தக சமநிலை ஏற்பட்டுள்ளது.
இத்தரவுகளின் படி, இவ்வருடம் இரு நாடுகளுக்கிடையிலான இருபக்க வர்த்தகம் 816 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பட்டுப் பாதை சுருக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானுடன் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இதற்கு பட்டுப்பாதை முன்முயற்சிகள் பெரிதும் உதவியுள்ளன. அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா இவ்வருடம் மாறும் என்று கூறப்பட்டள்ளது.
Post a Comment