வலிமை மிக்க சிங்கம், போட்டி சிங்கக் கூட்டத்தால் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
தன்சானியாவில் உள்ள தேசிய பூங்காவான செரன்கெட்டியின் ராஜா என்று அழைக்கப்பட்ட வலிமை மிக்க சிங்கம் ஒன்று அதன் போட்டி சிங்கக் கூட்டத்தால் கொல்லப்பட்டுள்ளது.
பொப் ஜூனியர் என்று அழைக்கப்படும் இந்த சிங்கத்தை அடக்கம் செய்யும் விசேட நிகழ்வு ஒன்றை வனத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
செரன்கெட்டியில் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் இந்த சிங்கம் அதிகம் புகைப்படத்திற்கு சிக்கிய சிங்கமாக உள்ளது. இது தனது சகோதரன் டைக்கிவ் உடன் இணைந்து ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.
இந்நிலையில் இளம் போட்டி சிங்கக் கூட்டம் ஒன்றினால் பொப் ஜூனியர் மற்றும் அதன் சகோதரன் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
Post a Comment