Header Ads



ஆப்கானை உலுக்கிய தாக்குதல் - அலுவலகத்தில் வைத்து ஆளுநர் படுகொலை


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் வாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். 


இந்நிலையில், பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். 


இந்த கொடூர தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். 


தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.