Header Ads



தயாசிறியை தூக்கினார் மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின்  பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார்.


அவரது வெற்றிடத்துக்கு  மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார்.


சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் காய்நகர்த்தலை மேற்கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, தயாசிறி ஜயசேகரவின் பதவியை மைத்திரிபால பறித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அடுத்த நகர்வு சிரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மைதிரியை வௌியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கிய கசப்பான உண்மையை இப்போதாவது பொதுமக்கள் உணரவேண்டும். அவர்களில் ஒரு சிலர் ஒன்றுசேர்ந்து நாடாளாவிய ரீதியில் சுயாதீன கட்சிகள் அமைத்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு இறுதியில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க ஒன்று சேருபவர்கள் நாட்டு மக்களையும் நாட்டையும் முன்வைத்த தகுதியுடையவர்களுக்கு பதவியையும் நாட்டை முன்னேற்றும் உறுதியான கொள்கையைும் உண்மையையும் நேர்மையையும் மதிக்கும் பின்பற்றும் மக்களை பொதுமக்கள் நியமித்தால் நாட்டை முன்னேற்றலாம்.அது தவிர கட்சிகளுக்குப் பின்னால் செல்வது மற்றொரு அழிவைக் கொண்டு வர செய்யும் முயற்சி மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.