Header Ads



"சிங்கள மக்கள் இனி ஒருபோதும் சில்லறை இனவாதத்துக்குள் சிக்கமாட்டார்கள்"


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியதாவது, 


"தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக ரணில் நடத்தும் நாடகமே சர்வ கட்சிப் பேச்சு. அவரால் அரசியல் தீர்வை வழங்கவே முடியாது. இது தமிழர்களுக்குத் தெரியும்.


அவர்கள் ஒருபோதும் ரணிலின் நாடகத்துக்கு ஏமாந்து ரணிலுக்கு வாக்களிக்கமாட்டார்கள். தெற்கில் ஒரு குழப்பத்தை - இனவாதத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் முற்பட்டார்.


அது நடக்கவில்லை. சிங்கள மக்கள் இனி ஒருபோதும் இந்த மாதிரியான சில்லறை இனவாதத்துக்குள் சிக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.