Header Ads



ரூபா மேலும் வலுவடையும் - முக்கிய காரணம் இதுதான்


இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்திக்குமென வெளியான தகவல் குறித்து, வயம்ப பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.


அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.


சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மற்றும் ஏனைய பெறுமதிகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு முக்கியமான உணவு மற்றும் போஷாக்கு உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்திற்கு மேலதிகமாக 6.6 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.