பணத்தை தொலைத்த ஜெயகாந்தன், ஆசிரியர் நகீப்புக்கு குவியும் பாராட்டு
(எஸ்.அஷ்ரப்கான்)
பெரிய நீலாவணையை சேர்ந்த எஸ்.ஜெயகாந்தன் என்பவரின் ரூபாய் பத்தாயிரம் பணம் கல்முனை பிரதான வீதி ஹற்றன் நெஸனல் வங்கிக்கு அருகாமையில் வைத்து கடந்த 2023.03.07 அன்று தொலைந்துள்ளது.
இந்த பணத்தை கண்டெடுத்த ஆசிரியர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எம்.எம்.நகீப் அவர்களால் அவர் கற்பிக்கும் பாடசாலையான கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் வைத்து நேற்று (07) பணத்தை தொலைத்த எஸ்.ஜெயகாந்தனுக்கு பாடசாலை அதிபர் ஏ.எச். அலிஅக்பர் முன்னிலையில் குறித்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட ஆசிரியருக்கு பணத்தை தொலைத்த எஸ்.ஜெயகாந்தன் உட்பட்ட பலர் நன்றி தெரிவித்தனர்.
Post a Comment