3 முஸ்லிம் நாடுகள், இலங்கைக்கு செய்த பேருதவி
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு மேலும் நான்கு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பாரிஸ் கிளப் அங்கத்துவ நாடுகள் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வௌிநாட்டு அமைச்சர் நன்றி சொல்வதற்கு ஏன் முந்தியடித்துக் கொண்டு தடுமாற வேண்டும் என்பது தான் எமக்கு விளங்குவதில்லை. இவருடைய நண்பர் கோதாவும் மஹிந்தவும் பட்டப்பகலில் மேற்படி நாடுகளிலிருந்து கடன்களைப் பெற்று அத்தனை பணத்தையும் வௌிநாடுகளில் முதலீடு செய்துவிட்டு தற்போது குரட்டைவிட்டுத் துயலும் போது விழித்திருந்து இவர் நண்பர்களின் களவுக்கு இன்னும் எண்ணெய் ஊற்றுகின்றாரா என்பது தான் புரியவில்லை. இந்த கடன் மறுசீரமைப்பு என்றால் என்னவென்று இந்த வௌிநாட்டு அமைச்சருக்கு விளங்குமா? மூன்று மாதங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களை ஆறு மாதங்களில் பெற்றுக் கொள்வதற்கு சம்மதிப்பது தான் இந்த கடன் மறுசீரமைப்பு. இந்த அமைச்சரைப் பார்க்கும் போது அடுத்த மூன்று மாதங்களில் கடனை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது என்றால் அவருக் கோ அவருடைய அமைச்சுக்கோ அரசாங்கத்துக்கோ எந்த திட்டமும் கிடையாது.அதுதான் உண்மை.
ReplyDelete