Header Ads



நான் என்ன சொன்னாலும், புதின் கேட்பார்


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: 


தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். ஆனாலும் இதுபோன்ற போரை நடத்த விட்டிருக்க மாட்டேன். 


போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறத? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷிய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது. மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.

1 comment:

  1. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கள் மிக முக்கியமாக உலக மக்கள் கருத்தில் கொள்ள வேண்டாம். அவர் மிக மோசமான ஒரு அமெரிக்க துவேசம் கொண்டவர். அமெரிக்காவில் வாழும் வௌிநாட்டவர்களை அந்த நாட்டிலிருந்து வௌியேற்ற வேண்டும் என்பதில் மறைமுகமாகவும் வௌிப்படையாகவும் இயங்கியவர். விரும்பியவர் விரும்பிய நாட்டைச் சேர்ந்தவர் அவரவர் விருப்பப்படி அமெரிக்காவில் சென்று வாழலாம் என்ற அமெரிக்க சட்டத்தை மதிக்கும் நாம் ட்ரம்பின் கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் யுத்தங்கள் போர்கள் ஏற்படாமல் தவிர்ந்து கொள்ளும் ட்ரம்பின் கொள்கையை நாம் மதிக்க வேண்டும். ட்ரம்பின் சொன்னால் அவர் பேச்சை ரஷ்ய ஜனாதிபதி புடின் கேட்டுக் கொள்வார் என்பதில் சிலவேளை உண்மைகள் இருக்கலாம். ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த போர் இன்று ஒருவருடத்துக்கும் மேலாக தொடர்கிறது. அதில் முடிவுக்கு வரும் என்பதில் எந்த நம்பிக்ைகயுமில்லை. இரு நாடுகளின் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் இழப்புக்கு அப்பால் உலக நாடுகள் அடைந்த நட்டங்களும் இழப்புகளும் பல ட்ரிலியன் டொலர்களுக்கு மேல். குறிப்பாக இலங்கையின் வௌிநாட்டு வர்த்தகமும், உல்லாசப்பிரயாணத்துறையும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனில் கண்மூடித்தனமான செயல்பாடுகள் காரணமாக உலகம் இன்னும் இருளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் மிகப் பெரும் அவலத்தை நோக்கிச் செல்லுகின்றன. தற்போது பிரிட்டன் கண்மூடித்தனமாக உக்ரைனுக்கு வழங்கிய கோடான கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் பயங்கர அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. அங்கு மிக மோசமான பணவீக்கமும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் மக்களின் வாழ்க்கையை கஷ்டத்துக்கு மேல் கஷ்டத்துக்கு இட்டுச் செல்கின்றது. இவை அனைத்துக்கும் மிக முக்கிய காரணம் சொந்த ஈகோவை நிலைநாட்ட நேரடியாக அமெரிக்க சனாதிபதி செய்த கண்மூடித்தனமாக உக்ரைனுக்கு வழங்கும் கோடான கோடி பெறுமதியான ஆயுதங்களும் பணமும் அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது. இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காணச் செய்து இலங்கை பொருளாதார ரீதியாக எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணும் வாய்ப்பையும் இழக்கச் செய்திருக்கின்றது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு உலக மக்கள் என்ற ரீதியாக நாம் என்ன மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நாம் சிந்தித்து செயலாற்றும் காலம் வந்திருக்கின்றது. உலக மட்டத்தில் பொதுமக்கள் கொண்டு செல்லும் உறுதியான செயல்திட்டங்கள் இந்த அழிவிலிருந்து உலக நாடுகளைக் காப்பாற்ற உதவும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.