Header Ads



வக்பு சொத்தான கல்லெலிய, அரபிக் கல்லூரியை அபகரிக்க திட்டமா..?


- பேருவளை ஹில்மி -

வக்பு சொத்து அபகரிப்பு வரிசையில் அடுத்து கல்லெலிய பெண்கள் அராபிக்கல்லூரி - ஆட்டம் ஆரம்பம் !


அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தின் முக்கிய செய்தியாக நாளுக்கு நாள் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.


இந்த வகையில் மல்வானை யதாமா அனாதை இல்லம், சுலைமான் மருத்துவமனை, கபூரியா அரபிக் கல்லூரி என வரிசை நீண்டு கொண்டு செல்கின்றது. 


அடுத்து பேசும் பொருளாக  கல்லெலிய பெண்கள் அராபிக் கல்லூரி சந்தைக்கு வந்துள்ளது.


கல்லெலிய அரபிக் கல்லூரியை முஸ்லிம் சமூகத்திற்கு பரிசாக வழங்கிய தனவந்தர்களின் வரிசையில் பிந்தி வந்த சில வாரிசுகள் இது தமக்கு சேர வேண்டிய செத்தாகும் என  வாதாட தலைப்பட்டுள்ளனர்.


இதன் முதல் கட்டமாக கல்லெலிய அரபிக் கல்லூரிக்கு சொந்தமான நிலப்பரப்பை தகர மதில் அமைத்து தனிப்பட்ட சொத்து ( private property) என அடையாளமிட்டு  எவரும் உள் நுழையாத வகையில் தடுத்து வைத்துள்ளனர்.


இது வக்பு சொத்துக்களில் ஒன்றான கல்லெலிய பெண்கள் அரபிக் கலாசாலையின்  ஆரம்ப கட்ட அபாகரிப்புக்கான ஆட்டத்தின் ஆரம்பமாகும்.


நிலைமை  தொடர் கதையாக மாறுமானால், இன்று முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமாக காணப்படும்  பல பாடசாலைகள், அராபிக் கல்லூரிகளின் நிலமை கவலைக்கிடமாக மாறும் என்பதில் ஐய்யப்பட வேண்டியதுள்ளது.


கபூரியாவில் மாணவர்கள் படும் சித்திரவதையை பார்க்கும் போதும்  ஈவிரக்கமற்ற நிர்வாகிகளின் இறை அச்சமற்ற நிலைமையையும் பார்க்கும் போதும் தற்போது நிலைமை  எந்த புத்தினுல் எவ்வாறான பாம்பு இருக்கின்றது என்று சொல்ல முடியாதுள்ளது. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வாசல்களும் முன் சென்ற சமூக  நல் உள்ளம் கொண்ட தனவந்தர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டவைகளாகும்.


எனவே வேர் ஊன்றியுள்ள இந்தப் புற்று நோய்க்கு உடநடியாக பரிகாரம் வழங்கப்பட்ட வேண்டும். இதற்கு சமூகமும் தலைமைகளும் தவறுமாயின் சமூக எதிர்காலம் பூச்சியமாக  மாறும்.


அனைத்திலும் மௌனம் காக்குமா ஆன்மீக  அமைப்பு, பொறுப்பான அதிகாரம் பெற்ற அதிகாரிகள் முடங்கிப் போய் இருக்கும் முப்திகள், செயல் இழந்திருக்கும்  செயலாளர்கள், வாயாலும் வார்த்தைகளாலும் வானை பிளக்கும் அரசியல் வாதிகள், என்ன செய்யப் போகிறார்கள்..?


இது எமது அதிகாரத்திற்கு அப்பால் பட்டது.  செவ்வாய் கிரகத்தில் உள்ளது என சொன்னாலும் வியப்பில்லை,  இதிலும் பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments

Powered by Blogger.