Header Ads



அல்குர்ஆனும், அற்பமான கொசுவும்


டைப்பாற்றல் மிக்க அல்லாஹ் சிலந்தி, ஈ போன்ற அற்பமான பூச்சினங்களை உதாரணமாக கூறிய போது அக்கால இறை மறுப்பாளர்கள் அதனை ஏளனமாக பார்த்தனர். ​வானங்கள், பூமியை படைத்தவன் என்று சொல்கின்றான். உதாரணம் கூற ஒரு அற்பமான பூச்சிகளா கிடைத்தது! என்றவாறு பேசிக்கொண்டனர். இது பற்றி அல்குர்ஆன் பின்வறுமாறு கூறுகிறது:

(( இறை மறுப்பாளர்களைப் பொறுத்தவரை; “இதன் மூலம் இறைவன் என்ன உவமையை நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கேட்கின்றனர்.))

📖 அல்குர்ஆன்: 2 / 26

பின்னர் அல்லாஹ் தனது படைப்பாற்றலை நிரூபிக்க கொசுவை கூட உதாரணம் கூற வெட்கப்படமாட்டான் ' என்று கூறிக் காட்டினான். இந்த வசனம் இறங்கி 1400 ஆண்டுகள் கடந்துவிட்டன. விஞ்ஞானம் அதன் இரு பக்க வாசல்களையும் திருந்து கொடுத்துள்ளது, கொசுவின் உடலமைப்பு பற்றிய அற்புதங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது. 

🦟 பெண் கொசு மாத்திரமே மனித இரத்தத்தை உறிஞ்சி உட்கொள்கிறது..

🦟 கொசுவின் தலையில் நூறு கண்கள் உள்ளன.

🦟 அதன் வாயில் 48 பற்கள் உள்ளன. 

🦟 அதனுள் மூன்று முழுமையான இதயங்கள் உள்ளன.

🦟 அதன் தும்பிக்கையில் ஆறு ஊசிகள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான செயல்பாடுகள் உள்ளன.

🦟 அதன் ஒவ்வொரு முனையிலும் மூன்று இறக்கைகள் உள்ளன.

🦟 அகச்சிவப்பு அமைப்பு போல் செயல்படும்  வெப்பமானி அமைப்பை அது கொண்டுள்ளது. அதனால் இரவின் இருடில் மனித தோலின் நிறம் ஊதா நிறத்தில் அதற்கு தென்படும். இது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் இரவு பார்வை அமைப்பை ஒத்தது.

🦟 ஊசி குத்தும் இடத்தை மயக்கும் திரவத்தை அது கொண்டுள்ளது. அதனால் மனிதன் உணராத வண்ணம் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை அதற்குள்ளது.

🦟 இரத்தங்களை பகுப்பாய்வு செய்யும் சாதனம் அதனிடம் உள்ளது. எந்த இரத்தத்தையும் அது உடனே விழுங்காது. 

🦟 இரத்தத்தை உருக்கி நீர்த்துப்போக வைக்கும் சாதனம் அதனிடம் உள்ளது. இதனால் இரத்தம் உறிஞ்சும் போது அதன் துல்லியமான குழாயினூடாக இலகுவாக உள்ளே சென்றுவிடும்.

🦟 மோப்பம்பிடிக்கும் கருவி அதனுள் அமையப்பெற்றுள்ளது. அதனூடாக 60 மீட்டர் தொலைவிலிருந்து மனித

வியர்வையின் வாசனையை உணர்ந்து கொள்ளும் வல்லமை அதற்குள்ளது.

🦟 இதை விட விசித்திரம் யாதெனில் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத, நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக் முடியுமான சின்னஞ்சிறிய ஒரு வகை பூச்சி, கொசுவின் முதுகின் மேல் வாழ்வதாக நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் இதைப் பற்றிறியும் பின்வறுமாறு கூறிக் காட்டுகின்றான்:

((கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்படமாட்டான். நம்பிக்கைக் கொண்டோர் 'இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.)) 

📖 அல்குர்ஆன்: 2 / 26

எக்காலத்திலும் போல இக்கால இறை மறுப்பாளர்களும், நாத்திகர்களும் இந்த வேத வசனங்களை ஏளனமாக பார்ப்பதை நிறுத்திக்கொள்ளதாக இல்லை!

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.