Header Ads



இளவரசரின் உத்தரவில் ஆரம்பிக்கபடும் மற்றுமொரு அதிரடித் திட்டம்


பட்டத்து இளவரசர் அல்-அமீர் முஹம்மத் பின் ஸல்மான் ஆலு ஸுதியின் பணிப்புரையின் பேரில், ஸவுதியின் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக வான்வளிப் போக்குவரத்தை நவீனப்படுத்தல், விஸ்தரிக்கும் வகையில் இது செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொது முதலீட்டு நிதியம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் உத்தரவிட்டுள்ளார். 

பெற்றோலில் மாத்திரம் தங்கியிருக்காத அதிக வருமான வளிகளைக் கொண்ட, அதிக வேலை வாய்ப்புக்களைக் கொண்ட, உலகின் வள்ளரசுகளுக்கு நிகரான நன்கு மேம்பட்ட ஒரு நாடாக ஸவுதியை மாற்றுதல் எனும் 2030 தொலை நோக்குத் திட்டத்தைக் கொண்டு செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் அடுத்த பாரிய நகர்வாக இது நோக்கப்படுகின்றது. இது உள் நாட்டின் விமான சேவை நிறுவனங்களுக்கிடையில் போட்டித் தன்மையை உருவாக்கும் மேலும் மேம்பட்ட சேவையை பயணாளிகளுக்கு உறுதிப்படுத்தும் என இளவரசர் குறிப்பிட்டுள்ளார். 


தலை நகர் றியாதை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இப்புதிய விமான சேவை நிறுவனத்தின் தலைவராக இத்துறையில் 40வருட கால அனுபவம் கொண்ட தோனி டக்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக 35பில்லியம் டொலரில் உலகின் மிகவும் தூரப்பிரதேசங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் புதிய போயிங் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. 


2030 ஆண்டளவில் உலகின் நூறு நாடுகளுக்கு சேவையினை வழங்குவதை இந்நிறுவனம் இலக்காக் கொண்டுள்ளது. ஸவுதியின் வருமானத்தில் 75 பில்லியன் ரியால்களை இது வழங்கும் எனவும் இரண்டு இலட்சம் நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் இதனால் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பா எனும் மூன்று பிரதான கண்டங்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் ஸவுதி அரேபியாவின் விரைவான முன்னேற்றத்தின் ஒரு மையிற்கல்லாகப் பார்க்கப்படுகின்றது. இத்திட்டதின் மூலம் ரியாத் உலகின் பயணிகள் சங்கமிக்கும் பிரதான இடமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.