Header Ads



இந்தியா முட்டைகள் தொடர்பில் மக்கள் அச்சப்படலாமா..?


இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், ஆய்வுக்கூட பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


பறவைக் காய்ச்சல் வைரஸ் உள்ளிட்ட சில வைரஸ் தொடர்பில் இதன்போது ஆய்வு செய்யப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டார்.


பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலும், கால்நடை மருத்துவ ஆய்வுக்கூடத்திலும் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


நான்கு நாட்களுக்குள் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.


இதேவேளை, முட்டை இறக்குமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை பேக்கரிகளில் மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கால்நடை வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கூறினார்.


சுகாதார அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள், இதனை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இந்த முட்டைகள் பயன்படுத்தப்படும் இடங்களின் முகவரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஹேமாலி கொத்தலாவல சுட்டிக்காட்டினார். 


அத்துடன் முட்டைகளின் கழிவுகளை அகற்றுவதற்குரிய வழிகாட்டல்கள் பேக்கரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால்,  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த முட்டையை இறக்குமதி செய்வதால் உள்ளூர் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என சுகாதார அமைச்சு கூறுவது மஹிந்த காலத்தில் உள்ளூரில் 5000 தாள்களை அச்சிடுவதால் பொருளாதாரத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூறிய அப்போது மத்திய வங்கியில் இருந்த கவர்னராக இருந்த அந்தக் கழுதையின் கருத்தை ஒத்திருக்கின்றது. இப்படியே ஆட்சிப்பித்தும், கொள்ளையும் தலைக்கேறிய இந்த கழுதைகளும் செக்கு மாடுகளும் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கும் வரை இந்த நாடு ஒருபோதும் உருப்படியாகாது. இந்தியன் முட்டையின் விலை இந்தியன் ரூபா 3.00 இலாபத்துடன் இலங்கையில் ரூபா 12 க்கு தாராளமாகவிற்கலாம். ஆனால் இந்த இறக்குமதியுடன் தொடர்புடைய மகோடிஸ்களுடன் தொடர்புடைய அத்தனை கொள்ளைக்காரர்களுக்கும் 500 கோடிக்கு மேல் கொள்ளையடிக்கும் விதத்தில் அவற்றின் சில்லறை விலை 40 ரூபா எனதீர்மானித்துள்ளார்கள். அதற்கு மேலாக அவை நிச்சியம் சுகாதார ரீதியாக உற்கொள்வது ஆபத்தாக அமையும். ஏனெனில் பறவைக்காய்ச்சல் அங்கு மிகவும் பரவலாக உள்ளது. சாதாரண ஆய்வுகூட பரிசோதனையில் எல்லா வைரஸ்களையும் கண்டறியும் வசதி இலங்கையில் இல்லை. அவற்றை பேக்கரிக்காரர்களுக்கு மாத்திரம் விநியோகம் செய்யப்படுமாம். பேக்கரிகள் கேக், உணவுப் பண்டங்களைச் செய்து இந்தியாவுக்கு மாத்திரம் விற்பனை செய்தால் பிச்சினையில்லை. எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது அந்த கேக்குகளும் இந்தியாவின் முட்டைகளால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களும் சகஜமாக எல்லோரும் ஓரளவு குறைந்த விலைக்கு தாராளமாக உண்ணுவார்கள். அதன் நோய் ஆபத்து இலங்கையர்களைத் தாக்கினால் வைத்தியசாலையில் மருந்து இல்லை. வாங்குவதற்கு டொலர் இல்லை. இனி அதன் விளைவுகளை யார் அனுபவிப்பார்கள். அதற்கு யாரும் பொறுப்பில்லை. களவாடிய கோடான கோடி டொலர்களும் வௌிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படும். பொது மக்கள் செத்து மடிந்தால் அதற்கு காரணம் கூறுவதற்கு அரச அடிவருடிகள் தாராளமாகஇருக்கின்றார்கள். இதனால் தான் இலங்கையில் உணவில் பாதுகாப்பு இல்லை என உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கின்றது. அது யாருடைய காதிலும் விழுவதில்லை. அன்று ஜேஆர் கூறியது போல், ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இனி கதை முடிந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.