Header Adsஇஸ்ரேலின் கொடுரம், பலஸ்தீன் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? இம்தியாஸ் Mp தொடுத்த கேள்விகள்


பலஸ்தீனம் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்றைய(08) பாராளுமன்ற அமர்வில் வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்த கேள்விகள் கீழ்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.


உலகம் என்ற சொல்லின் பரஸ்பர அடையாளங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை மதித்து,அவற்றுக்கு இடமளிப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும்போதே, ​அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை போன்று உலகம் ஒரு உலகளாவிய குடும்பமாக மாறுகிறது.


சர்வதேச சமூகம் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பையும், அந்நாட்டை பலவந்தமாக கைப்பற்ற முயற்ச்சிப்பதையும் கண்டித்து, அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவும் உக்ரேனிய மக்களின் சுதந்திரப் போராட்டத்தை வெற்றிகொள்வதற்காகத் தேவையான ஆதரவு வழங்கபட்டு வருகிறது.


ஆனால், இன்று பாலஸ்தீனம் விவகாரத்தில் முற்றிலும் எதிர் கொள்கையையே அவதானிக்கிறோம். பலஸ்தீனம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி வருகிறது.


இந்நாட்டில் சுய ஆட்சிக்கான உரிமையும், அடிப்படை மனித உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.


வர்க்கவாத ஆட்சியில் தமது உயிரை பழிக்கொடுத்தவர்கள், நாளாந்தம் தமது இருப்பிடங்கள், சொத்துக்களை அழித்து, தீமூட்டும் தாக்குதல் போன்றவற்றை செய்து, பயத்தை விதைத்து அதன் பிரதேசங்களைக் கைப்பற்றும் கொடிய விரிவாக்கவாதத்தை பாலஸ்தீனம் எதிர்கொள்கிறது.


சுதந்திரமான பாலஸ்தீன தேசத்திற்காக,ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலங்களை கூட  தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட இஸ்ரேலிய அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேசங்களில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு, குடியேற்றங்களும் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளினூடாகவே இவை முன்னெடுக்கப்படுகின்றன.


அரச அனுசரனையுடன் இடம்பெறும் பலவந்தமாக குடியேறுபவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளினால் "ஹுவாரா" கிராமாமமே கிட்டியளவில் பலியிடமாகியுள்ளது.


இந்நிலைமையை மேலும்  தீவிரமாக்கி வரும் இஸ்ரேலிய  நிதி இராஜாங்க அமைச்சர், "ஹுவாரா" கிராமம் உலக வரைபடத்தில் இருந்து அழித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.


அவரின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சகல உலக நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. வெறும் வாய்வார்த்தைகளை விட இம்மக்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் செயற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்பதுடன், பலஸ்தீன மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 


1.  இஸ்ரேலின் இந்த வலதுசாரி ஆட்சி மற்றும் பங்காளர்களால் முன்னேடுக்கப்படும் சித்திரவதைகள் அடக்குமுறை மற்றும் விரிவாக்கவாதம் என்பவற்றை உலக தலைவர்கள் எதிர்த்து வரும் போக்கில் இலங்கை அரசு இந்த அநீதியான கடும்போக்கு செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதா?


2.சுதந்திர மற்றும் சுய ஆட்சிக்கான உரிமைக்காக பாலஸ்தீனர்கள் மிக நீண்ட காலமாக செய்துவரும் போராட்டதுக்கான இலங்கையின் வரலாற்று அர்ப்பண ரீதியான நிலைப்பாட்டிலிருந்து விலகாமல், பாலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு சகல ஒத்துழைப்பையும் அதிகபட்சமாக வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?

No comments

Powered by Blogger.