Header Ads



தம்பதியினரின் மகத்தான சாதனை


- வி.ரி. சகாதேவராஜா -


காரைதீவில் தம்பதியர், பொதுமருத்துவத்தில் (VP) மருத்துவ முதுமாணி (MD in Surgery)பரீட்சையில் சித்திபெற்று, பொது மருத்துவ நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.


காரைதீவைச் சேர்ந்த வைத்திய தம்பதிகளான வைத்திய அதிகாரி டொக்டர் இராஜேஸ்வரன் அர்ஜுன்  மற்றும் வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி கேதுஜா அர்ஜுன் ஆகிய தம்பதியினரே ஒரே வேளையில் இம்மருத்துவ முதுமாணிப் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.


2023-03-01ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.


தற்சமயம், இவ் வைத்திய தம்பதியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்றனர்.


வைத்திய கலாநிதி முருகேசு கேதுஜா, 2007ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாக தெரிவாகி, சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.