வெள்ளைக்காரிக்கு கிடைத்த புது அனுபவம்
பொடி மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த போது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்ட அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நியூஸ் ஃபெர்ஸ்ட் பகிர்ந்த காணொளிக் காட்சியின்படி, மணப்பெண் போட்டியில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய குழுவொன்றினால் வெளிநாட்டுப் பெண் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் இலங்கை மணமகள் போன்று ஆடை அணிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், ஓர் அழகுக்கலை நிபுணர் உள்ளிட்ட குழுவினர், ஓடும் ரயிலுக்குள் இலங்கையின் திருமண ஆடைகளை வெளிநாட்டுப் பிரஜைக்கு அணிவித்தனர்.
Post a Comment