Header Ads



4 பேர் வபாத்


இன்று செவ்வாய்கிழமை, 21 ஆம் திகதி எல்லையில் நீராடச் சென்ற 10 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இவர்கள், கல்முனைக்குடி, மருதூர் மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களாவர்.


4 சகோதரர்களுக்கும் இறைவன் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும்  உயர்தர சுவர்க்கத்தினை  இறைவன் வழங்கி வைக்க பிராத்தனை செய்கின்றோம்.

1 comment:

  1. சிறிய வயதையுடைய ஆண்கள், பிள்ளைகள் கடலில் மூழ்கி, ஆறு, நீர்நிலைகளில் நீராடச் சென்று மூழ்கி மரணமடையும் செய்திகள் வருடத்துக்கு 1000 மேற்பட்ட தொகை சிறிய வயதையுடைய ஆண்கள் குறிப்பாக மரணடைகின்றனர். இந்த சோகத்தைத் தடுக்க இந்த சமூகம் ஏதாவது செய்கின்றதா என்றால் இல்லை என்பது தான் பதில். குறிப்பாக இவ்வாறு மரணடையும் ஆண்பிள்ளைகள் நூற்றுக்கு நூறு முஸ்லிம்கள்் தான் என்பது தகவல்களிலிந்து வௌியாவது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. மிக அண்மையில் கடலுக்கு நீராடச் சென்ற முஸ்லிம் வாலிபர்கள் இருவர் நீரில் மூழ்கி காலம் சென்ற சம்பவம் பற்றி அங்கு பாதுகாப்புச் சேவையிலிருந்து ஒரு உத்தியோகஸ்தர் கூறியது போல இங்கு தௌிவாக கடலுக்குச் செல்ல வேண்டாம், இது குளிப்பதற்கு மிக ஆபத்தான பகுதி என ஆபத்தை உணர்த்தும் வகையில் சுலோகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு வரும் வாலிபர்கள் அவற்றை வாசிக்கவோ நாங்கள் சொல்பவற்றைக் கேட்பதோ இல்லை அவர்களுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர். அப்படியானால் பெரியவர்களுடைய பேச்சைக் கேட்காமல் அங்கு குளிப்பது ஆரோக்கியமானதா என்பது பற்றி எந்தக் கரிசனையும் இன்றி நடந்து கொள்வது மரணத்தை இளம் வயதில் ஆர்வத்தோடு வாங்கிக் கொள்வதாகும். ஏன் இந்த சமூகத்தின் வாலிபர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் இந்த சமூகத்துக்கு எந்த அக்கறையுமில்லை. இளம் வயதில் வாகனமோட்டி விபத்துக்களை ஏற்படுத்தி மரணிப்பதும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மரணிக்கும் வாலிபர்களில் நூற்றுக்கு 80 வீதத்துக்கும் மேல் முஸ்லிம் இளைஞர்கள். இந்த அநியாயத்தை தடுக்க இந்த சமூகம் உருப்படியான திட்டங்களை வ குத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பசி பட்டினி ஒருபக்கம். இந்த அநியாயமான மரணத்தை நிச்சியம் தடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.