Header Ads



சூசகமாக மறைத்து வைத்திருந்த 23 கோடி ரூபா, பெறுமதியான கொக்கைனுடன் பெண் கைது


23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள்களுடன், வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மேற்படி பெண்மணி 26 வயதுடைய பொலிவியா நாட்டுப் பிரஜையென்றும் அவரிடமிருந்து 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நேற்று அதிகாலை துபாயிலிருந் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே அந்த வெளிநாட்டுப் பெண்மணி வருகைதந்துள்ளதாகவும், அவர் தமது பயணப் பொதியில் மறைத்து வைத்து சூசகமாக அந்த போதைப்பொருளை எடுத்துவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுவரை இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கொக்கெய்ன் போதைப்பொருளின் அதிகூடிய தொகை இதுவாகுமென்றும் குறித்த பெண்மணி தமது பயணப்பொதியில் ஆடைகளுக்கு மத்தியில் மறைத்துவைத்து அதனை எடுத்துவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அவரிடமிருந்து 4 கிலோ மற்றும் 600 கிராம் எடையுடைய கொக்ெகய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 230 மில்லியனாகுமென்றும் அவர் இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்து தருவதற்காக அவருக்கு 500 அமெரிக்கன் டொலர் கிடைக்கவிருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவர் இந்த போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெ ளியில் எடுத்துவந்து கையளிப்பதற்கு அவருக்குக் கிடைக்கும் தொலைபேசி


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.