21,000 ரூபா கட்டணத்துடன் மைத்திரியின் மனு நிராகரிப்பு
தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபாயட கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment