Header AdsSJB க்குள் புயல் வீசிய விவகாரம், கட்டுப்பட்டார் மயந்த


நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.


கடந்த வாரம் நடந்த சம்பவம் பற்றி தெளிவுபடுத்த விரும்புவதுடன், என்னை ஆசிர்வதித்தவர்களையும் விமர்சனங்களை முன்வைத்தவர்களையைம் நினைவு கூற விரும்புகிறேன்.நான் காமினி திஸாநாயக்க மற்றும் திருமதி ஸ்ரீமா திஸாநாயக்க ஆகியோரின் புதல்வரும் மூத்த சகோதரர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் சகோதரனுமாவேன்.நான் இரண்டு தடவைகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குச் சென்ற இளம் அரசியல்வாதியாகும்.


சஜித் பிரேமதாசவிற்கு பூரண ஆதரவையும் பலத்தையும் வழங்கி அவரின் அரசியல் பயணத்திற்கு உதவ வேண்டும் என்று கடந்த தேர்தலில் தீர்மானம் எடுத்தேன்.நான் எடுத்த முடிவு சரியானது,நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கிட்டத்தட்ட 56 பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கினர். நான் எடுத்த கொள்கையை,மக்கள் ஆணையை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன்.கொள்கை அடிப்படையில் மக்களை வைத்து அரசியல் செய்கிறோம். அரசியல் என்பது மக்களைப் பற்றியது என்று தந்தையார் எப்போதும் சொல்வார். கடந்த வாரம் நிதி பற்றிய தெரிவுக்குழுவிற்கு என்னை அழைத்தனர். ஒருமித்த முடிவின் மூலம் நிதிக்குழு தலைவர் பதவியை வழங்கினால் அதை ஏற்பீர்களா என்று கேட்டார்கள்.


2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நிதிக்குழு அமைக்கப்பட்ட போது, அதன் முதல் தலைவராக இருந்த சுமந்திரன் அவர்களின் கீழ் நிதிக்குழுவின் உறுப்பினராக பணியாற்றியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நிதிக்குழு அமர்வில் இருந்த நாட்களில் அவசரக் கூட்டம் இருக்கும் போது, சுமந்திரன் நிதிக்குழுவிற்கு வந்து தலைமை பதவிக்கு மயந்த திசாநாயக்கவை ஏற்று பொறுப்புகளை நிறைவேற்ற முன்மொழிவதாக அறிவித்து கையளிப்பார். நிதிக் குழுவின் பணியைத் தொடர முழுப் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டது.


நான் இல்லாத நேரத்தில் வேறு ஒரு எம்.பி.யிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  நான் நினைப்பது போல் 2015 முதல் 2016 வரை நிதிக்குழு உறுப்பினர் என்ற முறையில் எனது பொறுப்பு அரசாங்கத்திலா அல்லது எதிர்க்கட்சியிலா என்று கருதாமல் மக்களுக்காக சேவையாற்றினேன். அப்போது ஆளும் கட்சியில் இருந்தும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நான் எப்போதும் என் மனசாட்சிப்படி நடந்து கொண்டேன். எனவே,இந்தப் பொறுப்பை ஏற்குமாறு கடந்த வாரம் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அங்கு பொதுவான உடன்பாடு இருந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினேன்.


ஆனால் நிதிக் குழுவின் தலைவர் பதவியை வகிக்கவும் எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனது தந்தை காமினி திசாநாயக்க அவர்கள் மகவெலியவை பொறுப்பேற்ற போது, அவர் ஓர் பொறியாளராக இருக்கவில்லை என்பதை இங்கு கூறவேண்டும்.ஆனால் அவரால் தேவையான அறிவுறுத்தல்களை பெற்று விரைவாக மகாவலி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. அதேபோன்று ரணசிங்க பிரேமதாசவும் வீடுகளை கட்டும் போது அவர் கட்டிடக்கலை நிபுணராக இருக்கவில்லை. ஆனால் இன்றும் இந்நாட்டில் காமினி திசாநாயக்க, லலித் அதுலத்முதலி, ரணசிங்க பிரேமதாஸ போன்றவர்களின் பெயர்களை மக்கள் நினைவுகூருகின்றனர்.


இந்நேரத்தில் நடக்க வேண்டியது பொது எதிர்க்கட்சியை உருவாக்குவதுதான். இந்த பொருளாதார சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குறுகிய அரசியல் இலக்குகளுடன் செயற்படுவது தவறு என எதிர்க்கட்சியிலிருக்கும் போதும், ஆளும் கட்சியில் இருக்கும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் கூறியுள்ளேன்.2021 இல் நான் கூறிய ஒரு விடயம் என்னவென்றால்,நாம் ஒரு நாடாக செயற்பட வேண்டும்,ஒரு குழுவாக எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான கொள்கை முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறினேன்.


குறிப்பாக எமது தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் தேவையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகள், பாடசாலைகளுக்கு பஸ்கள் வழங்கி உதவிகள் செய்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இவ்வாறு சாமானிய மக்களுக்காக பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.நான் இன்று காலை அவருடன் கலந்துரையாடினேன்,குறிப்பாக நான் கூறியது போல்,நாங்கள் பொதுவான உடன்பாட்டை எட்ட விரும்புவதால்,நிதிக் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்தேன். 


இராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு சபாநாயகரிடம் சிறிது நேரத்தில் கையளிக்கப்படும். பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதாலும் எதிர்க்கட்சி என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் கீழ் அந்தப் பொறுப்பைக் கையாள வேண்டும் என்பதாலும் இந்தப் பணியைச் செய்கிறேன். 


பதவிகளில் அமர்வது எனக்குப் புதிதல்ல.  அவற்றை விடுவது எனக்கு பொருட்டுமல்ல. அவற்றை இலகுவாக திறக்க முடியும்,எனவே எனது தந்தை காமினி திசாநாயக்கவின் பாதையில் நான் பயணிக்கப் போகிறேன் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றேன். நாம் சரியானதைச் செய்ய வேண்டும். இன்று காலை சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடிய பின்னர் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக இந்நிலைப்பாட்டில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்தோம்.


நான் ஆளும் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து ஜனாதிபதியுடன் பேசி தவிசாளர் பதவியை பெறவில்லை.பொது உடன்பாட்டின் மூலம் இந்தப் பதவிகள் வழங்கப்படும் என எனக்கு அறிவிக்கப்பட்டபோது, ​அந்த உடன்பாட்டின் அடிப்படையில் தான் நான் குறித்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.


அதுவும் முதல் கூட்டம் 10 நிமிடங்களுக்கு என குறுகிய காலம் கூட்டப்பட்டாலும் அந்நேரத்துல் சில அவசர சட்டமூலங்கள் சமர்ப்பிக்ப்படலாம் என நினைத்தே அந்த கூட்டத்தில் அமர்ந்தேன். காணொளியை பார்த்தால் புரியும், இங்கு ஆளும் தரப்பு பல உறுப்பினர்கள் இருப்பதாகவும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராததால் தெளிவான ஒருமித்த உடன்பாடு இல்லை என்றும் முதல் அமர்விலையே கூறியுள்ளேன்.


இன்றியமையாதது ஏதாவது இருந்தால் அதை நிறைவேற்றி, அங்கேயே முடித்து,கட்சித் தலைவர்களுடன் பேசி,இனிவரும் காலத்தில் இந்த பதவியில் நீடிப்பதா,வேண்டாமா என்று முடிவு எடுங்கள் என்று அந்தக் கூட்டத்தில் கூறினேன்.


மேலும் இந்த நிலைப்பாட்டை ஏற்க நான் வற்புறுத்தப்படவில்லை. வியாழன் அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எனக்கு இந்த பதவிகள் கிடைத்தாக தெரிவித்தனர்.


வெள்ளிக்கிழமை கட்சிக்குள் உடன்பாடு உள்ளதா என பார்த்தேன்.சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் தனிப்பட்ட விடயம் காரணமாக கொழும்புக்கு வெளியே பயணிக்க வேண்டியிருந்தது.தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களும்,பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் என்னிடம் அடிக்கடி பேசினர். என்னால் கட்சியில் பிளவு ஏற்பட்டால், ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், எந்நேரத்திலும் பதவியை இராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று கூறினேன்.


எனவே,கட்சித் தலைமையின் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.ஒரு நாடு என்ற வகையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, பணமில்லை என கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.இந்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.