Mp ஆகினார் பௌஸி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்பட்டார்.
அவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
எம்.பி பதவியை இராஜினாமா செய்த முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடைசியில் மிஞ்சப் போவது இவ்வளவுதான். இறுதியில் உள்ளூராட்சித் தேர்தலை மிடுக்கி விடும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று இறுதியில் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படும். அதன் விளைவாக பாராளுமன்றத்தில் ஏதோ பொதுமக்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது கதைக்கும் மிகச் சிலரில் ஒருவர் பாராளுமன்றத்தில் இல்லை. அவருக்குப்பதிலாக பாராளுமன்றக் கதிரையைச் சூடாக்க கபுறுவா வா என்ற வயதில் தள்ளாடும் ஒருவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதிப்படுத்துவாராம். இதனால் யாருக்கு என்ன பயன் எனக்கேட்டால் அதற்குப் பதில் இல்லை. பொதுமக்களின் பணத்தை வீண்விரயமாக்க மற்றுறொரு பிரதிநிதி.
ReplyDelete