Header Adsதிருடர்களைப் பிடிப்பதற்கு எப்படி JVP யினர் முன்வருவார்கள் - எதிர்க்கட்சித் தலைவர்


இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் அனாதைகளாகிவிட்டனர் எனவும்,நிர்க்கதிக்காளி விட்டனர் எனவும்,சமீபகாலமாக உரங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இதுவரை உரங்கள் கிடைத்தபாடில்லை எனவும்,வெளிநாட்டில் இருந்து சேதனப்பசளை என மல உரங்களைக் கொண்டு வந்து விவசாயிகளையும் பயிர்களையும் நோய்வாய்ப் படுத்தி,விவசாயத்தையும் அழித்து நாட்டையும்  அழித்து நாட்டை வங்குரோத்தடையச் செய்ததாகவும்,சீரழிந்து சிதைந்து கிடக்கும் இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேவைகளை நிறைவேற்ற முடியாது நிர்க்கதியை சந்தித்துள்ள பாடசாலை பிள்ளைகளுக்கு, மதிய உணவு வழங்கி அவர்களுக்கு சீருடைகளை வழங்கிய ரணசிங்க பிரேமதாசவின் மகனாக இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பயணத்தின் தலைமையை தான் ஏற்பதாக அவர் தெரிவித்தார்.


இன்று விவசாயிக்கு தேவையான உரம் கிடைப்பதில்லை எனவும்,மண் எருவும் இல்லை எனவும்,பசளை களைக்கொள்ளிகள் இல்லாமல் ஒரு விவசாயியால் எவ்வாறு செய்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர்,இந்த விவசாயியை அழித்த யானை-காகம்-மொட்டு அரசாங்கத்தை விரட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும்,ஆட்களை ஒதுக்கி, மக்களை ஒதுக்கி வைத்து வனவிலங்கை  பாதுகாக்க முடியாது எனவும்,அது அழிவுக்கு மட்டுமே வழிவகுப்பதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.


திம்புலாகல, வெலிகந்த பக்கத்தில் மணல் வியாபாரம் அதிகளவில் இடம்பெற்றாலும் திம்புலாகல வெலிகந்த பிரதேச சபைகளுக்கு வருமானம் கிடைப்பதில்லை எனவும்,மணல் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் சபைகளுக்கு வரி செலுத்தும் திட்டத்தை தயாரித்து குறித்த பணத்தை பொதுமக்கள்  சேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


அலஹெர பகமுன பிரதேசத்தில் இரத்தினக்கல் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எமது ஆதரவையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி ஜீவனோபாயத்தை நெருக்கடிக்கடிக்குள் தள்ளி வருவதாகவும்,மக்களின் இயல்பு வாழ்க்கையை அழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதாரத்தை விரிவு படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,வரிக்கு மேல் வரி விதிப்பதே அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளதாகவும், இப்போது மாதம் 45000 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கும் வரி விதிக்கப்படுவதாகவும்.மின் கட்டணம் 250 சதவீதம் அதிகரிக்கப்ப்படும் எனவும்.இந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் துயர் பொருட்டள்ள எனவும்,கண்டுகொள்வதில்லை எனவும்.ஆட்சியாளர்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் மேலே செல்வதாகவும் 220 இலட்சம் குடிமக்களின் எதிர்காலமும் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டை அழித்த ராஜபக்சர்களை ஆட்சிபீடமேற்றிய மக்கள் விடுதலை முன்னனியே ஒரே தீர்வு எனக் கூறிக்கொண்டு வருவதாகவும்,ராஜபக்சர்களை வெல்ல வைத்து,பாதுகாத்த சோசலிஸவாதிகள் இப்போது ராஜபக்சர்கள் திருடியதை பிடிப்பதாக கூறுவது வேடிக்கையானது எனவும்,திருடர்களைப் பிறப்பித்து, திருடர்களை போஷித்த இவர்கள், தொண்டையில் இரத்தம் வரும் வரை திருட்டு கொள்ளை பறிமுதல் குறித்து கோஷமிடும் இவர்கள்,திருடர்களின் குடும்பத்தையும்,திருடர்களின் பிள்ளைகளைப் பெற்றெடுத்த இவர்கள் எவ்வாறு திருடர்களைப் பிடிப்பதற்கு முன்வருவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.


இந்த தீவிர மார்க்சிச,பாசிச சோசலிசக் குழுவின் நோக்கம் இடங்களையும் வளங்களையும் யாரும் சொந்தமாக வைத்திருக்க முடியாது என்பதாகும் எனவும்,அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது என்ற கொள்கையில் உள்ளவர்கள் எவ்வாறு நாட்டில்  சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்க விரும்புவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.விவசாய நிலங்கள்,வணிக நிலங்கள்,கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்வதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பிய அவர் அதுதான் அவர்களின் சமத்துவம் எனவும் தெரிவித்தார்.


தெளிவான பொருளாதார கொள்கையின் மூலமே சமத்துவம் உருவாக்கப்படும் எனவும்,விவசாயத்தின் மூலம் ஒரு நாடு அபிவிருத்தியடையும் எனவும்,சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியான்மைகள் இன்றியமையாதது எனவும்,சுற்றுலாத் தொழில் மற்றும் ஏற்றுமதித் தொழில் ஆகியவற்றாலையே ஒரு நாடு முன்னேற முடியும் எனவும்,சொத்துடமையை அரசுடமையாக்குவதால் சமூக சமத்துவம் நிலவாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்தத்துறைகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்தினால்,சகல முயற்சியான்மைகளும் வீழ்ச்சியடையும் எனவும்,விவசாய நிலங்கள் கூட தரிசாக மாறிவிடும் எனவும்,வேலைவாய்ப்புகள் கூட அற்றுப்போகும் எனவும்,ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல இந்த பழமைவாத சிந்தனைப் போக்கு உகந்ததல்ல எனவும் அவர் தெரிவித்தார்.


பொலன்னறுவையில் இன்று(23) இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.