Header Ads



அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக Dr இஸ்ஸதீன்


- அபு அலா - 

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக பொத்துவிலைச் சேர்ந்த வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் (MBBS) தனது கடமைகளை இன்று (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.


அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பதவி கடந்த பல மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்டு வந்தது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கான இடமாற்றக் கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசல குணவர்தனவினால் வழங்கி வைக்கப்பட்டு இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் 1998 பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவராக வெளியேறிய இவர் 1998 - 2002 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிவந்த நிலையில், 2002–2004 நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


பின்னர் 2004 – 2008 பொத்துவில் மாவட்ட வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு 2008 - 2010

கோமாரி CDMH வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், 2010–2012 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2013–2017 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும், 2018–2019 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2019–2020 திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.


பின்னர் 2021-2022 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையில், 2023.02.14 ஆம் திகதி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.


வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் சமூக சேவைகள் அமைப்பு, லயன்ஸ் கிளப் தலைவர், பொத்துவில் அருகம்பை புனர்வாழ்வு அதிகாரி, MLYF அமைப்பின் ஆலோசகர் போன்ற பல பதவிகளில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.