Header Ads



“இது அல்லாஹ்வின் ஏற்பாடு, அவன் நாடியதை நிறைவேற்றுவான் - நீங்கள் இழந்ததைவிட சிறந்த வீடுகளை நாங்களே கட்டித் தருகிறோம்"


- Munas Riyal -


✅ துருக்கியின் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் அவர்கள் நேற்று (7/2/2023) நாட்டு மக்களை நோக்கி ஆற்றிய உரையின் சுருக்கம்:

✅ புவி நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 54 ஆயிரம் கூடாரங்கள், மற்றும் 102 ஆயிரம் கட்டில்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

✅ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை *3,549* ஐ எட்டியுள்ளது, மேலும் 22,168 பேர் காயமடைந்துள்ளனர், 8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

✅ நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 53317 மீட்புப் பணியாட்கள் கடமையுல் உள்ளனர். 

✅ எமது நாட்டில் மட்டுமன்றி உலகிலேயே ஏற்பட்ட பெரும் அணர்த்தங்களுள் ஒன்றுக்கே நாம் இப்போது முகங்கொடுத்துள்ளோம். 

✅ பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறோம்.

✅ நாங்கள் அவசர உதவி வழங்குகிறோம், அதற்காக  100 பில்லியன் லீராக்களை ஆரம்பத் தொகையாக ஒதுக்கியுள்ளோம்.

✅ உதவிகளை எடுத்துச் செல்ல சில விமானங்களை ஒதுக்கி, சுகாதாரத் துறையில் *5 ஆயிரம் பணியாளர்களை* பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பினோம்.

“இது அல்லாஹ்வின் ஏற்பாடு, அவன் நாடியதை நிறைவேற்றுவான். நாம் இழந்தவர்களை ஒரு பொழுதும் மீட்டெடுக்க முடியாது.  எனினும் வீடுகளை இழந்தவர்கள் சன்ஜலப்படாதீர்கள்.  உங்கள் வீடுகளை நிர்மாணிக்க ஒரு லீராகூட நீங்கள் செலவழிக்க  வேண்டியதில்லை. நீங்கள் இழந்ததைவிட சிறந்த வீடுகளை நாங்களே கட்டித் தருகிறோம்.  ஒரு மரத்தைக்கூட இழந்திருந்தால் ஒன்றுக்குப் பத்து மரங்களைத் தருகிறோம்…. “

No comments

Powered by Blogger.