Header Ads



அவமானத்தினால் ரணில் செய்யத் துடித்த காரியம்


கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட அவமானகரமான இழப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை கலைத்துவிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார் என முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்தார்.


இது தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ரணில் பல கலந்துரையாடல்களைக் மேற்கொண்டிருந்ததாகவும் நவின் திசாநாயக்க ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் கட்சி கலைக்கப்படக் கூடாது என்று விரும்பினர், அதில் தாமும் ஒருவன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருப்பது கட்சிக்கு ஒரு பெரிய சொத்து என்றும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உயிர்வாழ்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நவீன் திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவை எவராலும் பயன்படுத்த முடியாது. இதனை தனது அனுபவ ரீதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.


பொதுவாக அவர்கள் ரணிலை பயன்படுத்துவதாக உணரலாம், ஆனால் அவர், அவர்களை மிகவும் தொழில்நுட்பமான முறையில் பயன்படுத்துகிறார் என்றும் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.