Header Ads



இனத்துவ அடிப்படையில் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை


இனத்துவ அடிப்படையில் இம்முறை எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


எதிர்காலத் தேர்தல்களுக்குப் பொருத்தமான முறையில் எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தார்.


தற்போதைக்கு உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரத்து 800 ஆக குறைப்பது, போட்டியிட்டு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5092 இலிருந்து 2800 வரை குறைப்பது போன்ற இலக்குகள் இந்த எல்லை நிர்ணய மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன.


அதே ​நேரம் முன்னைய எல்லைநிர்ணய நடவடிக்கையின் ​போது இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் இம்முறை முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


பல்வேறு தரப்புகளில் இருந்தும் அது குறித்த அழுத்தங்கள் வந்த போதும், தாம் அதனைப் புறம் தள்ளி எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளதாகுவும், எதிர்வரும் வாரத்தில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.