Header Ads



பாகிஸ்தானின் மிகச்சிறந்த உற்பத்தி இலங்கையில் அறிமுகம்



(அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் (TDAP) ஒத்துழைப்புடன், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் மாண்டரின் ஓரஞ்சு பழம் (Mandarins) சம்பந்தமான அறிமுக நிகழ்வை 16.02.2023 திகதி ஏற்பாடு செய்திருந்தது.


விவசாய இராஜாங்க அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி. சில்வா பிரதம அதிதியாக வும்  பாராளுமன்ற உறுப்பிணர்  ஏ.எச்.எம்.பௌசி கௌரவ அதிதியாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் பர்கி இதன் போது கருத்துத்தெரிவிக்கையில், 


பாகிஸ்தானின் மிகச்சிறந்த உற்பத்தி ஒன்றை இலங்கையில்  அறிமுகப்படுத்துவது இட்டு பெருமை அடைவதாகவும் உலகில் சிட்ரஸ் பழங்களை உற்பத்தி  செய்வதில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு சொந்தமான

தனித்துவமான சிட்ரஸ் வகையான மாண்டரின் ஓரஞ்சு பழ பழத்தின் மிகப்பெரிய  உற்பத்தியாளர் பாகிஸ்தான் திகழ்கிறது எனவும் குறிப்பிட்டார்.


இலங்கை இறக்குமதியாளர்களை பாகிஸ்தானில் இருந்து போட்டி விலையில், உயர்தர மாண்டரின் ஓரஞ்சு பழங்களை இறக்குமதி செய்ய உயர் ஸ்தானிகர் ஊக்குவித்ததோடு, இதன் மூலம் சுவையான மாண்டரின் ஓரஞ்சு பழத்தை அனைத்து இலங்கையர்களும் அனுபவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.


வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் திருமதி அஸ்மா கமல் கருத்துத்தெரிவிக்கையில் பாகிஸ்தான் சிட்ரஸ் துறை மற்றும் அதன் ஏற்றுமதி திறன் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கியதோடு கராச்சியில் உள்ள எக்ஸ்போ மையத்தில் 2023 பெப்ரவரி 4 முதல் 6 வரை பாகிஸ்தான் வர்த்தக மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின்nமுதலாவது சர்வதேச உணவு மற்றும் விவசாய கண்காட்சி குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கினார். பழங்கள் மற்றும் காய்கறிகள், இறைச்சி மற்றும் கோழி இறைச்சி , தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் பாகிஸ்தானில் இருந்து பெறுவதற்கான வாய்ப்பை உற்று நோக்குமாறும் இலங்கை வணிக சமூகத்தினரை அவர்  வேண்டிக்கொண்டார். இந்நிகழ்வில் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் இலங்கையின் முன்னணி பழ இறக்குமதியாளர்கள் மற்றும் வணிக சந்தை உரிமையார்கள்   கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.