Header Ads



நிலநடுக்கம் இலங்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பு, விசேட நிபுணர்கள் குழு இன்று கூடவுள்ளது


இந்தியாவின் வட பகுதியில் அல்லது ஹிமாலயாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானித்து, அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய விசேட நிபுணர்கள் குழு ஒன்று கூடவுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் இமயமலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கொழும்பிலும் உணரப்பட்டது. இதனால், இந்தியாவின் வடபகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டால் 2 ஆயிரத்து 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இலங்கையிலும் நிலநடுக்கம் உணரப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய இன்றைய தினம் -27- குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.