Header Ads



அம்பாறை அழிந்து போய் விடுமா..? (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்


குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர்  ஒலுவில்  பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம்  நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்  ஒலுவில் தொடங்கி நிந்தவூர் ,காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக  400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாகவும்   கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரைதீவு,  நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமையினை தடுக்க  நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க  பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



No comments

Powered by Blogger.