Header Ads



பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க விரும்பவில்லை


"முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுகின்றார். அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க விரும்பவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று -28- அவர் மேலும் கூறுகையில்,


"பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.


கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள சன்ன ஜயசுமனவே, இப்படியொரு கருத்தை சமூகமயப்படுத்தினார். அதில் எவ்வித உண்மையும் இல்லை.


மகிந்தவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை மக்கள் செய்வார்கள். கட்சிக்குள் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர்.


எனினும், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்வித கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமருடன் எமக்கு சிறந்த நல்லுறவு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மஹிந்த ராஜபக்ஸையும் அவனது குடும்பத்தையும் காப்பாற்ற விணாப் போன இரண்டு பேரை இந்த நாட்டையும் மக்களையும் படுகுழியில் தள்ளிய மஹிந்த குடும்பம் ஆட்சியில் தம்மையும் அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்ற நியமித்துவிட்டு அவர்கள் தற்காலிகமாக ஓய்வெடுக்கின்றனர். அவ்வளவுதான். நாட்டின் சொத்துக்களின் பெரும்பகுதியைக் கொள்ளையடித்த மாபெரும் கள்ளனான நாமலை சனாதிபதியாக்கும் கற்பனையில் உள்ள மஹிந்த அந்த கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றான். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த 70 வருடங்களுக்கு மேலாக ஏமாந்து போயுள்ள இந்த சமூகம் புதிதாக எதுவும் செய்யும் என்பதை பெரும்பாலும் எதிர்பார்ப்பதற்கில்லை.

    ReplyDelete
  2. இவர் அப்படித்தான் கூறுவார். முகத்தைப் பார்க்கவில்லையா? அவருக்கு கொடுத்தால் நாட்டின் அரைவாசி பிரச்சினைகள் தீருமென்று பொஹொட்டுவ கட்சி கூறுகின்றது. ஆம் எஞ்சிய எச்சம் சொச்சங்கள் இன்னும் களவாட வேண்டியிருக்கின்றது. அவற்றைச் சூறையாட பதவியும் அதிகாரமும் அவசியம் தேவை. அது இல்லாமை தான் தற்போது ராஜபக்ஸவுக்குள்ள பெரும் கவலை. ரணில் ராஜபக்ஸ உதவி செய்வாாரா?

    ReplyDelete

Powered by Blogger.