Header Ads



கணவனுக்கு சாபமாம், பூசாரியிடம் சென்ற மனைவியால் பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாபம்


12 வயதான சிறுமியை எட்டு நாட்களாக அறையொன்றில் அடைத்துவைத்து தியான பூஜை என்னும் பெயரில் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், அப்பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவரை, பொலிஸார் தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம், காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது என ஓபாத பொலிஸார் தெரிவித்தனர்.


சிறுமியை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியதுடன், சிறுமியை பரிசோதித்த வைத்தியர், அவர் கற்பழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


கணவனுக்கு ஏற்பட்ட சாபத்தை போக்குவதற்காக அவரது மனைவி இந்த பூசாரியை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அவருக்கு சடங்குகள் செய்தார். அத்துடன், அவர்களின் பன்னிரெண்டு வயது குழந்தைக்கு தெய்வீக ஆசீர்வாதத்தை வழங்க முடியும் என்று பூசாரி தெரிவித்துள்ளார்.


தங்கள் மகளுக்கு தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற பூசாரிக்கு  சிறுமியின்  பெற்றோர் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.


பூஜை செய்து எட்டு நாட்கள் கழித்து கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொடுப்பேன் என பூசாரி கூறியதையடுத்து பூசாரி அந்த சிறுமியுடன் வீட்டின் ஒரு அறையில் கழித்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


  சிறுமியைத் தவிர அனைவரையும் தான் தெரிவிக்கும் வரை வீட்டை விட்டு வெளியேறுமாறு பூசாரி கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கடவுளின் விருப்பத்தின் பேரில், சிறுமியை பூசாரியிடம் ஒப்படைத்துவிட்டு குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது, ​​​​ சிறுமியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும், யாரிடமாவது சொன்னால், குடும்பத்தாரைக் கொன்றுவிடுவதாகவும் கத்தியைக் காட்டி மிரட்டியதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


தனக்கு நேர்ந்ததை அச்சிறுமி தனது அத்தைக்கு தெரிவித்ததையடுத்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன, தவறான நம்பிக்கைகளைப் பின்பற்றி அப்பாவி சிறுமியின் வாழ்க்கை இருள் சூழ்ந்துள்ளதாகவும், இவ்வாறான மோசடியாளர்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.


இவ்வாறு ஆண் ஒருவருடன் அறையில் சிறுமியை தனிமையில் விட்டுச் சென்றதன் மூலம் சிறுமியின் பெற்றோர் பாரிய தவறை இழைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர்,  பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும்   குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.