Header Ads



இறந்த உடல்களை முழங்கால்களுக்கு மேல் தூக்குவதை, தடை செய்தவர்கள் குறித்த சஜித் கடும் விமர்சனம்


நாட்டின் துறைமுகங்கள் மற்றும் வங்கிகளை ஒரு சிறிய உத்தரவு மூலம் மூடிய, இறந்த உடலை முழங்கால்களுக்கு மேல் தூக்குவதை தடைசெய்த, இரவில் விளக்குகள் ஏற்றுவதைக் கூட தடை செய்த, 88 மற்றும் 89 ஆம் ஆண்டுகளின் பலிகடாக்கள் நாட்டை கட்டியெழுப்ப தீர்வுகளை வழங்குவோம் என்று தம்பட்டம்அடித்துக் கொண்டு இந்நாட்களில் செயற்படுவதாகவும், 2005 இல் இந்நாட்டை அழித்த சுனாமி நிதி மோசடிசெய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சவுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்தவர்கள் குறித்த தரப்பினரே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (06) கெஸ்பேவ பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.


88 மற்றும் 89 இல் நாடு முழுவதும் 2 கிளர்ச்சிகள் நடந்தபோதும் கூட ரணசிங்க பிரேமதாச ஒருபோதும்பொருளாதாரத்தை சுருக்குவதற்கு முயற்சிக்கவில்லை எனவும், ஒரு தீர்மானத்தை எட்டியதுடன் சர்வதேசநாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஆடைத் தொழிற்சாலைத்திட்டம் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்தார் எனவும்,எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்கள்பக்கம் சிந்தித்தே அவர் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆனால் தற்போது நம் நாடு கடனை செலுத்தாத நாடாக,அரசாங்கமே பிரகடனப்படுத்தியவாறு வறிய நாடாகமாறியுள்ளதாகவும்,இவ்வாறான நிலையில் இப்பிரச்சினையில் இருந்து விடுபட பொருளாதாரம் விரிவாக்கல்செய்யப்பட வேண்டுமா?அல்லது பொருளாதாரம் சுருக்கப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டும்என்றாலும்,தற்போதைய அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சிக்கான செயற்பாடுகளையே செய்கிறது எனவும், சந்தைத் தேவையைக் குறைத்து மக்களிடையே புழங்கும் பணத்தை குறைத்து,நாட்டில் பணவீக்கத்தைகுறைத்து, அதன் மூலம் நிலுவை விகிதத்தை வலுப்படுத்த நினைத்தாலும்,இதனால் மக்கள் மீது பாரியவரிச்சுமையே சுமத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எதிர்காலத்தில் 45000 ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் வரி விதிக்கப்படும் என ஒரு கதை பரவிவருவதாகவும்,இதன் காரணமாக,ஏராளமான புத்திஜீவிகள், நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டுவெளியேறியுள்ளனர் எனவும்,வரிச் சுமையே இதற்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும்குறிப்பிட்டார்.


நாட்டில் பாரியளவில் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள நேரத்தில்,சமூகத்தின் பல பிரிவினர் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,விரைவில் மின் கட்டணம் 65-75 சதவீதம் என இரு மடங்காக உயரும் என்பதால் நாட்டில் பிரச்சினைகள் மேலும் மோசமாகும் எனவும்,இதனால் வரியோர்களின் எண்ணிக்கை வெகுவாகஅதிகரிக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்நேரத்தில் நாம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு முன்னோக்கி செல்ல  வேண்டும்எனவும்,பொருளாதாரத்தை சுருக்காமல் விரிவாக்கல் செய்ய வேண்டும் என்பதுவே அந்த நிலைப்பாடாக அமையவேண்டும் எனவும், இதன் ஊடாக மக்களை கட்டியெழுப்பல் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தஎதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பல சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.