Header Ads



பிரபாகரனின் பெயரைக் கேட்டு சிங்களவர் அஞ்சுவார்கள் என, தமிழ் தலைவர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது


புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை வைத்து இன்னும் எத்தனை காலத்துக்கு அரசியல் செய்யப் போகின்றீர்கள்?  என இந்திய - இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களிடம் புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.


இரு நாட்டு தமிழ் அரசியல் தலைவர்களும் இன்னமும் தூக்கத்தில் இருந்தவாறே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள் ஆனால் தமிழ் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.


எனவே பிரபாகரனின் பெயரைச் சொல்லி தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


பிரபாகரனின் பெயரைக் கேட்டு சிங்கள மக்கள் அஞ்சுவார்கள் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,


பிரபாகரன் இன்னமும் உயிருடன் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ள நெடுமாறன் முதலில் தன்னைச் சுய பரிசோதனை செய்யவேண்டும்.


நெடுமாறனின் கருத்தை வைத்து அரசியல் செய்ய முனையும் இந்திய - இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களைப் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.


2919 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனை எமது படையினர் அழித்துவிட்டார்கள். எனவே, அவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் உயிர்த்தெழவும் மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.