Header Ads



கால்பந்து வீரர் ஜனாஸாவாக மீட்பு - மனைவி உயிருடன் மீட்கப்பட்டார்


துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பலியான தகவல் வெளியாகியுள்ளது.


துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்தவர் 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். இந்த நிலையில் 6 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர் மாயமானதாக தகவல் வெளியானது.


ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கத்தை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீட்பு நடவடிக்கைகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தனியார் கால்பந்து அணியான யெனி மாலத்யஸ்போர் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது. தங்கள் அணியின் கோல்கீப்பரை இழந்துள்ளதாகவும், இயற்கை பேரிடருக்கு அருமையான ஒரு நபரை இழந்துள்ளோம் எனவும் யெனி மாலத்யஸ்போர் அணி நிர்வாகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, திங்களன்று அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மனைவியை உயிருடன் மீட்டுள்ளதாகவும், இறுதி வரையில் போராடியும் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.