Header Ads



மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துடிப்பது அவமானம்


 "மக்கள் தேர்தலின் மூலம் தகுந்த பாடத்தை புகட்டி, மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஆட்சி பீடம் ஏறாதபடி விரட்டியடிக்கப்பட வேண்டும்." இவ்வாறு, முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


"நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை அதளபாதளத்தில் தள்ளிவிட்டு, மக்கள் மீது பொருளாதார நெருக்கடியை திணித்த ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறத் துடிக்கிறார்கள்.


இந்த தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தினரோ, உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய சகாக்களோ வெற்றி பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.


பிரதமர் பதவியை மகிந்தவுக்கு மீண்டும் வழங்கப்போவதாக கதை வருகிறது, மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துடிப்பது அவமானமும், வெட்கக்கேடும் நிறைந்த செயலாகும்." இவ்வாறு முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.