Header Ads



தேர்ஸ்டன் மாண­வர்களுக்காக ஆர்வம் காட்சிய ஆட்சியாளர், இறந்துபோன முஸ்லிம் உயிர்களை புறக்கணித்தார் - உதவிக்கு விரைந்த பிக்கு


- ஏ.ஆர்.ஏ. பரீல் -


நுவ­ரெ­லி­யாவில் ஏழு உயிர்­களைக் காவு­கொண்ட கோர விபத்து இடம்­பெற்று இரு வாரங்­க­ளா­கியும் அந்தச் சோகம் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்­டி­ருக்­கி­றது. குடும்­பத்­த­வர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களை ஆற்­றுப்­ப­டுத்த முடி­யா­தி­ருக்­கி­றது.


பிர­ப­ல­மான நுவ­ரெ­லியா புலி­யா­வத்தை பேக்­கரி உரி­மை­யா­ள­ரான சேக் தாவூதின் புதல்­வர்கள் அப்துல் ரஹீம் மற்றும் அன்வர் காதரின் குடும்­பத்­தினர் நோயுற்­றி­ருந்த தங்­க­ளது சகோ­த­ரியின் கண­வரை சுகம் விசா­ரிப்­ப­தற்­காக திக்­கோ­யா­வி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்குச் சென்று கொண்­டி­ருந்த போதே இந்த பஸ் – வேன்– முச்­சக்­க­ர­வண்டி விபத்து நிகழ்ந்­தது.


நுவ­ரெ­லியா பிர­தான வீதி ரதல்ல பிர­தே­சத்தில் இவ்­வி­பத்து நிகழ்ந்­துள்­ளது. கல்விச் சுற்­றுலா சென்­று­கொண்­டி­ருந்த கொழும்பு தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் பய­ணித்த பஸ் சார­தியின் கட்­டுப்­பாட்­டினை இழந்து வேன் மற்றும் முச்­சக்­க­ர­வண்­டி­யுடன் மோதியே இக்­கோர விபத்து இடம்­பெற்­றுள்­ளது.


அரசின் மீது அதி­ருப்தி


நுவ­ரெ­லி­யாவில் இடம்­பெற்ற கோர­ வி­பத்தில் ஏழு உயிர்கள் காவு கொள்­ளப்­பட்ட போதும் உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் உட­ன­டி­யாக அவ­தானம் செலுத்­தாமை தொடர்பில் பல்­வேறு தரப்­பு­களும் அதி­ருப்தி வெளி­யிட்­டன. இவ்­வி­பத்தில் காய­ம­டைந்த கொழும்பு தேர்ஸ்டன் கல்­லூ­ரியின் மாண­வர்கள் தொடர்­பிலே அதி­கம் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. அவர்­க­ளது நிலை தொடர்­பிலே ஆரா­யப்­பட்­டது. விபத்­துக்­குள்­ளான பஸ் வண்­டியில் 41 மாண­வர்கள் இருந்­தனர்.


நாட்டின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட பக்­க­சார்­பாக செயற்­பட்­ட­தாக சமூக ஊட­கங்­களில் குற்றம் சுமத்­தப்­பட்­டது.


இவ்­வி­பத்தில் காய­ம­டைந்த மாண­வர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கு­மாறும், தேவை ஏற்­படின் விமானம் மூலம் அவர்­களை கொழும்­புக்கு அழைத்து வரு­மாறும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்­தார்.


இதே­வேளை விபத்தில் காவு கொள்­ளப்­பட்ட ஏழு உயிர்கள் தொடர்பில் ஜனா­தி­பதி கவனம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை.


இந்­நி­லையில் விபத்தில் பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­களை நேரில் சந்­தித்து ஆறுதல் வழங்­கி­யுள்ள நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரை நாம் பாராட்ட வேண்டும்.

கடந்த காலங்­களில் கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­கா­ரங்­களில் இவ­ரது செயற்­பா­டுகள் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக இருந்­தது. என்­றாலும் விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களை மனி­தா­பி­மான ரீதியில் சந்­தித்து ஆறுதல் கூறி அன்­ப­ளிப்­பு­களை வழங்­கிய தேரரை பாராட்­டாமல் இருக்க முடி­யா­து.


விபத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளின் வீடு­க­ளுக்கு

நெல்­லி­கல தேரர் நேரடி விஜயம்


அண்­மையில் நுவ­ரெ­லியா ரதல்ல பகு­தியில் இடம்­பெற்ற கோர விபத்தில் பலி­யா­ன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஆறுதல் கூறு­வ­தற்­கா­கவும், காய­ம­டைந்­த­வர்­களின் விரை­வான நலத்­துக்கு பிரார்த்­திப்­ப­தற்­கா­கவும் நாங்கள் இப்­ப­கு­திக்கு வருகை தந்தோம். குடும்­பங்­க­ளுக்கு எம்­மா­லான உத­வி­களை வழங்­கி­யுள்ளோம் என கூர­கல நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.


அவரும் குழு­வி­னரும் விபத்து இடம்­பெற்ற ரதல்ல பகு­திக்கும் விஜயம் செய்து பார்­வை­யிட்­டனர். வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், இந்த விபத்து இடம்­பெற்ற போது விபத்தில் சிக்­கிய தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் தொடர்­பிலேயே முழு நாடும் ஆட்­சி­யா­ளர்­களும் தேடிப்­பார்த்­தார்கள். கவலை கொண்­டார்கள். ஆனால் அன்று முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் பலி­யா­கி­யி­ருந்­தார்கள்.தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வரும் எமது சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு­வரும் பலி­யா­கி­யி­ருந்­தார்கள். இவர்கள் பற்றி ஆட்­சி­யா­ளர்­களும் பெரும்­பான்மை சமூ­கமும் தேடிப்­பார்க்­க­வில்லை. பெரும்­பான்மைச் சமூகம் சிறு­பான்மைச் சமூ­கத்­தி­னரைப் பாது­காக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே நாம் இருக்­கிறோம்.


நாங்கள் இளை­ஞர்கள் குழு­வொன்­றுடன் அவர்­க­ளது பகு­திக்கும் அவர்­க­ளது வீட்­டுக்கும் நேரடி விஜயம் செய்து உத­விகள் வழங்­கினோம்.


சமூ­கத்தில் வசதி வாய்ப்­புள்ள அனை­வ­ரி­டத்­திலும் நான் வேண்­டு­கோ­ளொன்­றினை விடுக்­கிறேன். நானு­ஓயா­வி­லுள்ள பாதிக்­கப்­பட்­ட தமிழ் குடும்­பத்­துக்கும், ஹட்­ட­னி­லுள்ள பாதிக்­கப்­பட்­ட முஸ்லிம் குடும்­பத்­துக்கும் இயன்ற உத­வி­களைச் செய்­யுங்கள். உண்­மையில் அவர்­களே வேத­னையில் ஆழ்ந்­துள்­ளார்கள். பாட­சாலை செல்லும் மாண­வர்கள் பலி­யா­கி­யுள்­ளார்கள். குரு­மார்­க­ளுக்­கும் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் நான் அழைப்பு விடுக்­கிறேன்.


இந்த விபத்தின் போது எம்­ம­வர்கள் நடந்­து­கொண்ட விதம் தவறு. கொழும்­பி­லி­ருந்து கல்விச் சுற்­றுலா வந்த மாண­வர்கள் தொடர்­பிலே எல்­லோரும் தேடிப்­பார்த்­தார்கள். கவ­லை­ய­டைந்­தார்கள். ஆனால் பாதிக்­கப்­பட்ட ஏழை தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்­களைப் பற்றி நாம் தேடிப்­பார்க்­க­வில்லை.


இந்த விபத்தில் பெரும்­பான்மை சமூகம் நடந்து கொண்ட விதம் தொடர்பில் நான் திருப்­தி­ய­டை­ய­வில்லை. இது மனி­தா­பி­மான முறை­மைக்கு மாறு­பட்­ட­தாகும். இதனால் நான் மிகவும் வேத­னை­ய­டைந்தேன். அத­னாலே நான் இங்கு விஜயம் செய்தேன்.

வர்த்­தக சமூ­கத்­துக்கும் நான் அழைப்பு விடுக்­கிறேன். பலி­யான 25 வயது தமிழ் இளைஞர் தான் அவ­ரது குடும்­பத்தைப் பரா­ம­ரித்து வந்­தவர். அவர் விபத்தில் பலி­யா­கி­விட்டார். அந்த இளை­ஞரின் பெற்­றோர்கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு மன உறுதி கிட்­ட­வேண்­டு­மென நாம் பிரார்த்­திக்­கிறோம்.


இந்த விபத்து நடந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டு மக்கள் நடந்­து­கொண்ட விதம் எமக்கு வேத­னை­ய­ளிக்­கி­றது. இந்­நாட்டில் கொழும்­பி­லாக இருக்­கலாம். ஹட்­ட­னி­லாக இருக்­கலாம். நானு ஓயா­வி­லாக இருக்­கலாம். யாழ்ப்­பா­ணத்­தி­லாக இருக்­கலாம். நாம் அனை­வரும் மனி­தர்­களே. அதனால் நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­விகள் புரிய வேண்டும்.


நான் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கிறேன். பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்ப அங்­கத்­த­வர்­களைச் சந்­தி­யுங்கள். உத­விகள் வழங்­குங்கள். அவர்­க­ளுக்கு ஆறுதல் கூறுங்கள். ஏனென்றால் மர­ணித்­த­வர்­களை விட மர­ணித்­த­வர்­களின் குடும்­பத்­தி­னரே இன்று மீளா துய­ரத்தில் ஆழ்ந்­துள்­ளார்கள். மர­ணித்­த­வர்கள் மர­ணித்து விட்­டார்கள். அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கு வார்த்­தைகள் மூல­மா­வது ஆறுதல் அளி­யுங்கள்’ என்று தெரி­வித்தார்.


விபத்தில் பலி­யான வேன் சார­தியின்

குடும்­பத்­துக்கு உதவி


நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தலை­மை­யி­லான குழு­வினர் விபத்தில் பலி­யான வேன் சார­தியின் இல்­லத்­துக்கு விஜயம் செய்து அவ­ரது பெற்­றோரைச் சந்­தித்து ஆறுதல் கூறி­னார்கள். அவர்­க­ளுக்கு தம்­ம­ர­தன தேர­ரினால் ஒரு இலட்சம் ரூபா உத­வியும் வழங்­கப்­பட்­டது.


பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பத்­துடன் சந்­திப்­பு


வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் விபத்தில் ஐந்து உயிர்கள் காவு கொள்­ளப்­பட்டு பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பத்­தின் வீட்­டுக்­கும் நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்­டனர்.


பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் குடும்­பத்­தினர் தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரின் விஜ­யத்­துக்கு நன்றி தெரி­வித்­தனர். விபத்து நடந்து ஒரு­வார கால­மா­கியும் எந்­தவோர் அர­சி­யல்­வா­தியும் எங்கள் தொடர்பில் ஒரு வார்த்­தை­யேனும் பேச­வில்லை என்­பதை கவ­லை­யுடன் தெரி­வித்­தனர்.


விபத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் குடும்­பத்­துக்கு தேரர் ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்தார். எங்­க­ளுக்குள் தமிழ், முஸ்லிம், சிங்­களம் என்ற பேதம் இருக்கக் கூடாது. பெரும்­பான்மை சமூகம் என்ற வகையில் சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை நாம் கவ­னிக்க வேண்டும். காயங்­க­ளுக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டுள்ள பிள்­ளை­களின் தாய் தந்தையர் இல்லை. சகோதரர்கள் இல்லை. எல்லோரும் பலியாகிவிட்டார்கள். பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு உதவிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். முதல் கட்டமாக நாம் இன்று ஒரு இலட்சம் ரூபா வழங்குகிறோம் என்றார்.


காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் சிறுவனையும் தேரர் பார்வையிட்டு அறுதல் கூறினார்.


முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்கும் விஜயம்


வத்துக்கும்புரே தம்மரதன தேரரின் தலைமையிலான குழுவினர் விபத்தில் பலியான முச்சக்கர வண்டி சாரதியின் இல்லத்துக்கும் விஜயம் செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அத்தோடு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவினையும் வழங்கினார்கள்.


தேரரும் சிங்­கள இளை­­ஞர்­களும் முன்­வந்து மேற்­கொண்­ட இச் செயல் பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதில் நாமும் முன்நிற்போம். அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் துயரத்தில் பங்கு கொள்வோம்.- Vidivelli

No comments

Powered by Blogger.