பௌஸி குறித்து, மஹேல கூற வருவது என்ன..??
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள பௌஸி குறித்து முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் வீரர் மஹேல ஜெயவர்த்தனே டுவீட் பதிவொன்றை செய்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முஜிபுர் ரகுமான் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து A.H.M பௌஸி அந்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
85 வயதான அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்றைய தினம் -09- பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் A.H.M பௌஸி குறித்து மஹேல ஜெயவர்த்தனே டுவீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், '85 வயதில் கண்ணாடி அணியாமல் அவரால் படிக்க முடியும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
Post a Comment