Header Ads



இந்தியாவின் முட்டைகள் யாருக்கு வழங்கப்படும் - அமைச்சர் கூறியுள்ள விடயம்


இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் மொத்தமாக உற்பத்திக் கைத்தொழில்களுக்கு வழங்கப்படும் எனவும், இதனால் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டே முட்டை இறக்குமதிக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ருவன்வெல்லவில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உணவுத் தொழில் நடத்துவதற்கு முட்டை தட்டுப்பாடு தடையாக இருப்பதால் முட்டை இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு மாத்த்திரமே இந்த குறைப்பு பொருந்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும்.


இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தது.அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.TL

1 comment:

  1. இந்தியாவில் முட்டையின் மொத்தவிலை இந்தியன் ரூபா 4.00 இலங்கைக்கு இறக்குமதி செய்ய செலவாகுவது ரூபா 4.00x2.5 = 10 இலங்கை ரூபா இறக்குமதி போக்குவரத்து நகர்த்தும் கூலி, ஏனைய செலவுகள், இலாபம் உற்பட ஆகக்கூடியது இலங்கை ரூபா 13.00 செலவாகும். அப்படியானால் அமைச்சர் ஒரு முட்டையை ரூபா 30.00 விற்கப் போகின்றார். அப்படியானால் இருபது மில்லியன் முட்டைகளின் மேலதிக செலவான ரூபா 350 கோடி எங்கே சென்றது என்பதை நிதி இராஜாங்க அமைச்சர் நாட்டுக்குச் சொல்ல வேண்டும். வெறுமனே 20 மில்லியன் முட்டை இறக்குமதி செய்து பின்புறத்தால் 350 கோடி கப்பம் பெறும் நாட்டில் வாழுவது வெறும் அவமானம் மட்டுமல்ல கேவலமும் தான். ஒரு முட்டைக்கு 17 ரூபா கொள்ளையடித்து இறக்குமதியுடன் தொடர்புடைய அத்தனை பேருக்கும் கப்பம் செலுத்தவேண்டுமா என்பதை அமைச்சர் இந்த நாட்டு மக்களுக்குக் கூற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.