ஆட்சி மாற்றங்களால் பயனில்லை, சிஸ்டம் மாற வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு தேசிய மக்கள் சக்தி கீழ்படியாதென அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யார் என்ன கூறினாலும் மார்ச் 09ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் , நான் ஒரு ஹிட்லர் போன்றவன். எனவே, வீதிக்கு இறங்கி போராடுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என ரணில் முன்னர் கூறியிருந்தார்.
இப்போது தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என்கிறார். மக்களின் எதிர்ப்பை வீதிக்கு இறங்கி வெளிப்படுத்தவும், தேர்தல் ஊடாக வெளிப்படுத்தவும் ரணில் இடமளிப்பதில்லை.
சந்திரிக்காவை மாற்றுவதற்கு மஹிந்தவைக் கொண்டுவந்தார்கள். மஹிந்தவை மாற்றுவதற்கு மைத்திரி - ரணிலைக் கொண்டுவந்தார்கள். மைத்திரி - ரணிலை மாற்றுவதற்கு கோட்டாவைக் கொண்டுவந்தார்கள். ஆட்சி மாற்றங்களால் பயனில்லை. சிஸ்டம் (முறைமை) மாற்றமே வேண்டும் எனவும் அநுர தெரிவித்தார்.
இந்த சிஸ்டம் மாற்றத்துக்கான முதலடியாக மார்ச் 09ஆம் திகதியை நாட்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் சொத்துகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மக்களின் சொத்துகளைப் பாதுகாக்கின்றன ஆட்சியாளர்களே நாட்டுக்கு தேவை. இதனை திசைக்காட்டியால் மாத்திரமே செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment