Header Ads



இலங்கை அமைச்சருக்கு சென்னையில் வரவேற்பு, கேரள அரபுக் கல்லுரி நிகழ்விலும் பங்கேற்பு


- எம்.கே. ஷாகுல் ஹமீது -


சென்னை கோடம்பாக்கம் புலியூர் மஸ்ஜித் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு  இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரிக்கு வரவேற்பு அளித்தார்கள்.


இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் வழக்கறிஞர் அலி சப்ரி கேரளா மாநில பனங்காடு பகுதியில் அரபிக் கல்லூரி விழாவிற்கு கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை தமிழகம் வருகை  வந்தார். அவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


பின்னர் சென்னை கோடம்பாக்கம் புலியூர் மஸ்ஜித் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் வழக்கறிஞர் அலி சப்ரி சென்றார். தொழுகைக்கு பிறகு  அவருக்கு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் ஜே‌எம். அமானுல்லாஹ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். 

பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் எஸ்.எம்.எஸ்‌ முஹம்மது உமர் ரிழுவானுல்லாஹ் ஜமாலி வரவேற்று பேசினார்.


பின்னர் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் வழக்கறிஞர் அலி சப்ரி பேசுகையில் : எனக்கு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இங்கு தலைமை இமாம் ஜூம்மா உரையில் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார். அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அதை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.


இலங்கை பொறுத்தவரை இப்போது நாடு பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு எங்களுக்கு பல்வேறு உதவி செய்துள்ளது அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ‌. இலங்கைக்கு இங்குள்ள தொழில் அதிபர்கள் அனைவரும் தொழில் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பது டன் அனைத்து வசதிகளை செய்து தருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் சென்னை கோடம்பாக்கம் புலியூர் மஸ்ஜித் பள்ளிவாசல் செயலாளர்  அல்ஹாஜ் எம்.எம். இப்றாஹிம், சென்னை கோடம்பாக்கம் புலியூர் மஸ்ஜித் பள்ளிவாசல் பொருளாளர்  அல்ஹாஜ் அப்துல் காதர், ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.





1 comment:

  1. இலங்கை வௌியுறவு அமைச்சருக்கு அவருடைய பதவியின் அடிப்படை நோக்கம் தற்போது சென்னையில் கிடைக்கிறது. அது நிச்சியம் இலங்கையில் கிடையாது. அதற்கு அவர்தான் சாட்சி. நான் இலங்கை முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்டவரல்ல. முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழவோ மரணித்தால் இலங்கை மண்ணில் புதைக்கவோ தகுதியற்ற பிணக்கட்டை அதை மாலைத்தீவில் எங்கேயாவது ஒரு பால் தீவில் புதைத்துவிடட்டும். இங்கு எமக்கு வேண்டாம் என ஆட்சி செய்து இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாவை தீயிட்டு கொளுத்தி அதன் சாம்பலை வேண்டுமானால் நாம் கொடுப்போம். அந்த அத்தனை பாவங்களையும் செய்த கோதா என்ற சைத்தானின் கையால் தான் இந்த அலிசப்ரி என்ற வழக்கறிஞர் என்பது இலங்கையில் மட்டுமல்ல உலகில் வாழும் குறிப்பாக மத்திய கிழக்கில் அதிலும் குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், அரபிகளுக்கு இந்த அலிசப்ரியை மிகவும் நன்றாகத் தெரியும். அதனால் தான் அண்மையில் சவூதி அரேபியா சென்ற போது கெபினட் அமைச்சரும் வௌிநாட்டு அமைச்சருமான ஒருவருக்கு சவூதி அரேபியாவில் அமைச்சு அந்தஸ்த்தில் உள்ள எந்த உயர் அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு வக்காளத்து வாங்கியதன் விளைவை மிகச் சரியாக அவர் மத்திய கிழக்கில் வாங்கிக் கட்டினார். இலங்கையில் எந்த ஊருக்குச் சென்றாலும் அவரை வரவேற்கக் அவருக்குக் காத்திருப்பது பழைய கிழிந்துபோன செருப்புதான். ஆனால் சென்னை முஸ்லிம்களும் எங்கள் உறவுகள் தான். இந்திய அரசு முஸ்லிம்களுக்குச் செய்யும் நீண்டகால அட்டகாசங்களால் மனம் நொந்து போயுள்ள அவர்களுக்கு சிறிய ஆறுதலுக்காக இவ்வாறு வரவேற்புக் கொடுத்ததால் அவர்களின் வரவேற்புவைப் பார்த்து இவர் மயங்கினாலும் அவருக்கு சென்னை முஸ்லிம்களின் மனதில் அப்படி ஒரு இடம் கிடையாது. அதுதான் உண்மை. கோட்டும் டையும் போட்டு மக்களின் பிழைப்பில் வாழும் உலக அரசியல் ஞானம் தெரியாத ஒரு வக்கீல் இந்த அரசியலில் எவ்வளவுகாலம் இன்னும் தங்கியிருக்கலாம் என்பது மிக விரைவில் தெரியவரும்.

    ReplyDelete

Powered by Blogger.