Header Ads



தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கவில்லை, நிதியும் இல்லை


தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இன்றைய சபை -23- அமர்வில் பங்கேற்று உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


தேர்தலை நடத்துவதில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


சிலர் மார்ச் 9 தேர்தல் நடத்தப்படும் எனக் கூறுகின்றனர். ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினரான மொஹமட்டும் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்து, அதற்காக ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியை பெற்றுள்ளனர்.


எனவே, மற்றைய மூன்று உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டில் இருக்கமாட்டார்கள். இந்த நிலையில் அது குறித்து கலந்துரையாட வேண்டும். தற்போது தேர்தல் நடத்துவதற்கு நிதியும் இல்லை எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த சன்னபதியின் கருத்தைக் கொஞ்சம் அவதானமாக வாசியுங்கள். அங்கே நான் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த முஜீபுர்ரஹ்மானை சூழ்ச்சி செய்து பாராளுமன்றத்திலிருந்து வௌியேற்றும் சூழ்ச்சிக்கு மாட்ட வேண்டாம் என தான் முஜீபுர்ரஹ்மானுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அதனை அவர் கேட்காமல் இப்போது மாட்டிக் கொண்டிருப்பதாகவும், இங்கு தேர்தல் திணைக்களம் தேர்தல் நடாத்தும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை அங்கு ஒருவரை அழைத்துக் கொண்டு அந்த முஹம்மத் தேர்தலை மார்ச் 9 நடாத்த தீர்மானித்ததற்கு மற்ற இருவரும் உடன்படவில்லை என இங்கு முஹம்மதைக் குற்றம் சாட்டுகின்றார். அங்கே ஆள் போட்டு கொலை அச்சுறுத்தல் நடாத்தி முஹம்மத் பொலிஸில் முறையீடு செய்தமைக்கு இன்னும் விசாரணை இல்லை. இப்படி முஸ்லிம்களை வைத்து பந்தடிக்கின்றார் இந்த சன்னபதி. இனத்துவேசத்தின் பிரதான கப்பல் யாரென்பது இப்போது புரிகின்றதா? அவன் பள்ளிவாயலையும் அப்பாவி முஸ்லிம்களையும் துவேசத்துக்கு பலிக்கடாவாக மாற்றினான். இவன் சரியான முறையில் அரச சேவையாற்றும் முஸ்லிம்களை இனத்துவேசத்துக்கு பலிக்கடாவாக்க முயற்சி செய்கின்றான். இதனை இந்த நாட்டு முஸ்லிமகளும் ஏனையவர்களும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.