Header Ads



கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பௌசி


அரசாங்கத்திற்கு, சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று -24-  உத்தரவிட்டுள்ளது.


புனர்வாழ்வு அமைச்சுக்கு, நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்றை, தமது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன், அவருக்கு பகிரங்க நீதிமன்றில், இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.