Header Ads



ஈஸடர் தாக்குதலுக்கு அடுத்த நாள் ஜனாதிபதி பதவியிலிருந்து, மைத்திரிபால விலகியிருந்தால் அவரை மன்னித்திருப்போம்


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு அடுத்த நாள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறையை ஏற்று பதவி விலகியிருந்தால் கத்தோலிக்க திருச்சபை அவரை மன்னித்திருக்கும் என தேவாலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


“குண்டுத் தாக்குதல் நடந்த மறுநாளே முன்னாள் ஜனாதிபதி தனது குறைகளை ஏற்றுக்கொண்டு பதவியை இராஜினாமா செய்திருந்தால் அவரை மன்னித்திருப்போம்” என கொழும்பு பேராயர் சமூக தொடர்பு பிரிவு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.


“.சிறீசேனா என்ன செய்திருக்க வேண்டும் என்றால் அவர் பொறுப்பேற்றுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதுதான். இதை உச்சநீதிமன்றம் நிரூபித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி தேசத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக கூறுகிறது. இதனால் உயிர் மற்றும் உடமை இழப்பு ஏற்பட்டுள்ளது” என தீர்ப்பை மேற்கோள் காட்டி அருட்தந்தை காமினி இதனை தெரிவித்துள்ளார்.


” மன்னிப்பு கேட்பதற்கு முன், சிறிசேனா தனது தவறுகளை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்” என்றும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.


“பொறுப்புள்ள அனைவரையும் மன்னிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் வரவிருக்கும் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த பின்னர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் பின்னணியில் உள்ள உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்” என்றும் அருட்தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.