Header Ads



பசியை போக்க முயன்ற தாய் உயிரிழப்பு - 4 பிள்ளைகள் பரிதவிப்பு


கம்பளையில் பசியின் கொடுமையினால் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த சாந்தி குமாரி என்ற 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.


அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள். மேலும் அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருவதும், இறந்தவருக்கு வேலை இல்லை என்பதும் தெரியவந்தது.


கணவன் சம்பாதிக்கும் வருமானம் குடும்பப் பராமரிப்பிற்குப் போதாததால் பாடசாலை பிள்ளைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், உணவு வழங்குதல், மருந்து வழங்குதல் போன்ற பணிகளைச் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


இந்த நிலையில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க பலாப்பழத்தை கண்டுபிடித்த இந்த தாய், மதியம் உணவு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


வீட்டின் அருகே இருந்த பலா மரத்தில் ஒரு பழம் இருப்பதைப் பார்த்து, அதை பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நீளமான தடியில் கத்தியை ஒட்டியிருந்தாலும், பலாப்பழம் அதை விட உயரமாக இருப்பதால் அதை பறிக்க முடியவில்லை.


பலா மரத்தின் அருகே இருந்த ஜாதிக்காய் மரத்தில் ஏறி இதனை பறிக்க முயற்சித்துள்ளார். எல்லா முயற்சிகளும் பலனளிக்கவில்லை பிள்ளைகளை நினைத்து பலாப்பழத்தை பறிக்க மரத்தில் ஏறியுள்ளார்.


இந்நிலையில் பலத்த சத்தம் கேட்டு பிள்ளைகள் மரத்தின் அருகே வந்து பார்த்தபோது, ​​அவர் மரத்தின் அருகே கிடப்பதைக் கண்டு கிராம மக்களின் உதவியை நாடி கம்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனழிக்காத நிலையில் உயிழந்துள்ளார்.

1 comment:

  1. இந்த அநியாயமாக ஒரு தாய் பிள்ளைகளின் பசியைப் போக்க செய்த முயற்சியில் காலம் சென்ற தாய்க்கு நிச்சியம் அல்லாஹ்வுடைய அருள்கிடைக்கும். அதற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். அந்த நான்கு பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் வைக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டிருக்கின்றது. இந்த அநியாயமான மரணத்துக்கு முதலில் நாட்டின் சனாதிபதி பதில் சொல்லியாக வேண்டும் அத்துடன் கம்பளையில் போதிய வசதியுள்ளவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் இது போன்று கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று அவர்களால் இயன்ற உதவிகளை வழங்கி அந்த பிள்ளைகள் பசியில்லாது வாழவைப்பது வசதிபடைத்த அனைவரின் பொறுப்பாகும் அந்த பொறுப்பிலிருந்து சிங்கள,முஸ்லிம் தமிழ் எனயாரும் விதிவிலக்கில்லை. குறிப்பாக அடுத்தவீட்டான் பசியிலிருக்கும் போது நானும் எனது குடும்பத்தினரும் சாப்பிட்டுவிட்டிருந்தால் நான் ஒரு போதும் முஸ்லிமாக இருக்க முடியாது. எனவே, தயவு செய்து உங்கள் அடுத்தவீட்டைக் கொஞ்சம் பாருங்கள். அவர்களுக்கு உணவு உண்ண வசதியிருக்கின்றதா என்பதை கொஞ்சம் விசாரித்து அறிந்து கொண்டு உதவி செய்யுங்கள். இந்தப் பொறுப்பை நீங்கள் தட்டிக் கழித்தால் நீங்கள் ஒருபோதும் இறைவனிடம் தப்பமுடியாது என்பதை மாத்திரம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.