Header Ads



ஒரு ரூபாவைக் கூட சம்பாதிக்காத அநுரகுமார, தேர்தலுக்காக இதுவரை 3 பில்லியன் ரூபாவை செலவிட எங்கிருந்து பணம் வந்தது..?


உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை 03 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நிதியை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவழித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பதுளை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று கூட்டங்களை அவர்கள் நடத்தியுள்ளதாகவும், ஒரு கூட்டத்துக்கு ஒரு கோடி ரூபா என்ற வகையில் மூன்று கோடி ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


அந்தக் கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய நாளிலிருந்து ஒரு ரூபாவைக் கூட சம்பாதிக்கவில்லை. இந்நிலையில் ஒரு கூட்டத்திற்கு ஒரு கோடி ரூபா என்ற ரீதியில் செலவழிப்பதற்கு இவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


ரோஹண விஜேவீர மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் அன்று மோதிக்கொண்டதைப் போல, இப்போதும் சஜித் பிரேமதாச அனுர திசநாயக்க ஆகியோர் மோதிக்கொள்கின்றனர். யார்? தேர்தல் நடத்துவதில்லை என்று கூறியது? மார்ச் (09) தேர்தல் நடைபெறும். தனது பகுதியில் உள்ள தெமோதர தமிழ் வித்தியாலயத்தில் வாக்களிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

1 comment:

  1. මේකට උත්තර ඉතාම සරලය ඌත් හොරා මුත් හොරා පාර්ලිමෙන්දුවේ ඉන්න දෙසිය විසිපහම අමු හොරුන්.

    ReplyDelete

Powered by Blogger.