உள்ளூராட்சி தேர்தல் ரிட்மனு - 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தால் பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தினால் இந்த மனு இன்று (10) ஆராயப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மூன்று காரணங்களுக்காக இந்த மனுவை பேணுவதற்கு எதிராக ஆரம்ப ஆட்சேபனைகளை இன்று முன்வைத்தார்.
Post a Comment