Header Adsஇலங்கையில் 16 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் அரச ஊழியர், எப்படி நாங்கள் நிர்வாகம் செய்வது..?


எந்த நாட்டுடனும் பகைகளை ஏற்படுத்திக்கொள்ளாது அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான  இரண்டு கட்டளைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அதன்போது அவர் மேலும் கூறுகையில்,


காலத்திற்கு காலம் எவ்வாறு ஒவ்வொரு கட்சிகளும் துறைமுக நகரம் தொடர்பில் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளன. உலக நாடுகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருளாதார நகரங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் உள்ளன. இந்நிலையில் நாங்கள் இங்கிருக்கும் வளத்தை பயன்படுத்தி எவ்வாறு வருமானத்தை அதிகரித்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது என்று சிந்தித்து செயற்பட வேண்டும்.


வருமானத்தை அதிகரித்தாலே நாட்டை முன்னேற்ற முடியும். அரச சேவைக்கே அதிகளவில் நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் 107 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் பாகிஸ்தானில் 101 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும், பங்களாதேஷில் 140 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலும் அரச ஊழியர் இருக்கும் நிலையில் இலங்கையில் 16 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் அரச ஊழியர் இருக்கின்றார். இந்நிலையில் அரச வருமானத்தில் 80 வீதத்தை அரச சேவையை நடத்திச் செல்லவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவுமே பயன்படுத்தப்படுகின்றது.


இதனை எப்படி நாங்கள் முகம்கொடுத்து நிர்வாகம் செய்யப் போகின்றோம் என்றே பார்க்க வேண்டும். வரிகளை அதிகரித்தாலும் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் கடனுக்கான வட்டிகளை அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளது.

லெபனான், இரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்திருந்தன. லெபனான் போன்ற நாடுகளில் மின்வெட்டு நேரத்தைக்கூட கூற முடியாதளவுக்கு நிலைமை உள்ளது. ஆனால் இங்கே முன்னேற்றம் கண்டு பணவீக்கத்தை 90இல் இருந்து இப்போது குறைத்து வருகின்றோம் என்றார்.   

1 comment:

  1. எந்த நாட்டுடனும் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளாது எல்லோருடனும் ஒறறுமையாகப் பயணிக்க வேண்டும் எனக்கூறும் அலிசப்ரி உலக சுகாதார நிறுவனத்தின் மிகத் தௌிவான அறிவுறுத்தலுக்கு முரணாக செயற்பட்டு உங்கள் தலைவர் கோதா முஸ்லிம்களின் ஜனாஸாவைத் தீயிலிட்டுக் கொளுத்தும் போது எந்த அரசியல் செல்வாக்குமில்லாத நாம் சத்தம் போட்டு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் போது அந்த அநியாயத்தைக் மத்திய கிழக்கு மட்டுமன்றி அமெரிக்கா, ஐ.இராச்சியம் உற்பட ஐரோப்பிய நாடுகளிலும் ஏன் முழு உலகத்திலும் உள்ள முஸ்லிம்களும் ஏனைய மக்களும் WHO வின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படவேண்டாம் கோவிட் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம்களிடம் ஒப்படையுங்கள் என உலகம் முழுவதும் சத்தம் போடும்போது நீங்கள் நீதியமைச்சராக எங்கே இருந்தீர்கள். ரணிலுக்கு கொஞ்சம் உலக அறிவு இருப்பதனால் சொல்லும் கவிதைக்கு நீங்கள் இப்போது ஆட்டம் ஆடுகின்றீர்கள். முஸ்லிம்களின் கோவிட் மரணம் பிணமும் இலங்கைக்கு ஆபத்தானது, இங்கே அடக்கக் கூடாது என கோதா பிஸ்ஸா அடக்கம் செய்ய மாலைத்தீவுக்கு அனுப்பிவைக்க இரவோடு இரவாக மாலைத்தீவு அரசின் அனுமதியையும் அந்த பிஸ்ஸா எடுத்தபோது உங்களுக்கு முள்ளம் தண்டு இருந்தால் உடனடியாக பதவி விலகிருக்க வேண்டும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அந்த சைத்தானுக்கு காக்கா பிடித்துவிட்டு இப்போது அரசியல் பேசுகின்றீர். நிச்சியமாகச் சொல்லுகின்றோம் .உமது அரசியலால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கோ இந்த நாட்டுக்ேகா எந்தப் பயனுமில்லை. இலவசமாக பாராளுமன்றம் நுழைந்து கோட்டையும் சூட்டையும் காட்டிக் கொண்டு பறையடிக்கும் உங்களைப் போன்றவர்கள் வரலாற்றில் கறுப்பு எழுத்துக்களால் பதியப்படும். முஸ்லிம்களின் கண்ணீரை வார்த்து அவர்களின் மனதை நோவித்து உள்ளத்தைப் புண்படுத்திய சைத்தான்களின் பட்டியலில் நிச்சியம் உங்கள் பெயரும் இடம் பெறும். அல்லாஹ்வைச் சந்திக்கும் போது நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ் கண்களால் பார்ப்போம். அதுவரை உங்கள் பர டிப்லோமடிக் நோம்ஸ்களைத் தொடருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.